முகப்பு /செய்தி /வணிகம் / அர்பன்லேடார் நிறுவனத்தின் 96% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

அர்பன்லேடார் நிறுவனத்தின் 96% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

அர்பன் லேடார் ஹோம் டெக்கார் சொலியூஸன் நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் வாங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸின் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவிலுள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 1 லட்சம் கோடி அளவு வரையிலான முதலீடுகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனமும் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டியது. இந்தநிலையில், அர்பன் லேடார் ஹோம் டெகார் சொலியூஸன்ஸ் நிறுவனத்தில் 182 கோடி ரூபாய் முதலீடு செய்து அந்நிறுவனத்தில் 96 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

மேலும், 75 கோடி ரூபாய்வரை முதலீடு செய்வதற்கு முன்மொழிந்துள்ளது. மேற்கண்ட முதலீடு டிசம்பர் 2023-ம் ஆண்டுக்கள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு இந்தியாவில் அர்பன் லேடார் சில நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டது. வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர்ஸ் மற்றும் அழகுசாதனைப் பொருள்களுக்கான ஆன்லைன் தளங்களை அர்பன்லேடார் நிறுவனம் தொழிலாக செய்துவருகிறது.

மேலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சில்லறை வர்த்தக கடைகளையும் கொண்டுள்ளது. அர்பன் லேடார் நிறுவனத்தின் வருடாந்திர மொத்தவணிகம், 2019, 2018, 2017 ஆண்டுகள் முறையே, 434 கோடி ரூபாய், 151 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் ஆகும். இந்த முதலீட்டுக்கு அரசு அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவைப்படவில்லை.

First published:

Tags: Reliance Retail