ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், அமெரிக்க புகழ் 7-Eleven ஸ்டோர்களை இந்தியாவில் தொடங்கி நடத்துவதற்கு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
7-Eleven என்ற சங்கிலித்தொடர் கடைகள் அமெரிக்கா, ஜப்பான், தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலம். கூல் டிரிங்ஸ், ஸ்னாக்ஸ், காஃபி, டீ வகையறாக்கள் இக்கடைகளில் கிடைக்கும். இக்கடைகள் விமான நிலையங்கள், ரயில், மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மால்கள், பல்கலைக்கழகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுவப்பட்டிருக்கும். உலகம் முழுதும் 18 நாடுகளில் சுமார் 77,000க்கும் மேற்பட்ட 7-Eleven கடைகள் செயல்பட்டு வருகின்றன.
1920 காலகட்டத்தில் முதல் முறையாக அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இக்கடை திறக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பால், முட்டை, தயிர் போன்றவை விற்பனை செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இவை மாற்றப்பட்டன என்பதால் இக்கடைகளுக்கு மவுசு கூடியது. மேலும் கடை திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தன.
காலை 7 மணி முதல் இரவு 11 மணி இக்கடைகள் செயல்படும் என்பதால் இந்த சங்கிலித்தொடர் கடைகளுக்கு 7-Eleven என பெயர் வந்தது. அந்தக் காலத்தில் இது போல நேரங்களில் கடைகள் செயல்படுவது மிகவும் அரிதாகும்.
Also Read:
சிவ நாடார் முதல் கலாநிதி மாறன் வரை.. ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்கள்!
1950 காலகட்டத்தில் அமெரிக்காவை தாண்டி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இக்கடைகள் விஸ்தரிக்கப்பட்டன. பின்னர் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரிடம் இந்நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறியது.
தற்போது இந்தியாவிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் 7-Eleven கடைகள் அறிமுகமாக இருக்கின்றன. அக்டோபர் 9ம் தேதியன்று மும்பை அந்தேரி பகுதியில் 7-Eleven-ன் முதல் கடை திறக்கப்படும் எனவும், பின்னர் படிப்படியாக பல இடங்களிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் தலைவரான இஷா அம்பானி தெரிவித்துள்ளார்.
Also Read:
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியல்.. டாப் 10-ல் யார் யார்?
முன்னதாக கடந்த வாரம் 7-Eleven நிறுவனத்துடன் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதன்படி 2020ம் ஆண்டே 7-Eleven கடைகள் இந்தியாவில் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்ததால் 7-Eleven நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அந்நிறுவனம் ரத்து செய்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.