‘ஹேண்ட்மேட் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், கைவினைப் பொருட்கள் மற்றும் வளமான இந்திய கலை வடிவங்களை உலகளில் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், கைவினைப்பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் ஸ்வதேஷ் என்னும் சில்லரை விற்பனை நிலையங்களை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்வதேஷ் விற்பனையகங்கள் மூலம் இந்திய கைவினைக்கலைஞர்கள் தங்களின் பொருட்களை விற்க உலகளாவிய மேடை கிடைக்கும். இங்கு உள்ளூர் மக்களிடம் கைத்தறி ஜவுளி, கைவினை மற்றும் வேளாண் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யப்படும்.
இதுதவிர ரிலையன்ஸ் ரீடெயில்ஸ் நிறுவனத்தின் அங்கமான ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனம் மாநில அரசுகளோடு கைகோர்த்து அங்குள்ள கைவினைக் கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க அரசுடன் கைகோர்த்துள்ளது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.