பிரபல உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான Clovia-ன் 89 விழுக்காடு பங்குகளை ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
purple panda fashions என்ற நிறுவனம், clovia என்ற உள்ளாடை நிறுவன வணிகத்தை செய்து வருகிறது. இந்நிலையில் clovia நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் 950 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
பெரும்பான்மையான பங்குகளை ரிலையன்ஸ் தன்வசப்படுத்திய நிலையில், clovia நிறுவனத்தை துவங்கிய அதே குழுவினர் வணிகத்தை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - பெண் தொழில் முனைவோர்களுக்கு புதிய money ப்ரீபெயிட் கார்டு வசதி!
குளோவியாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பங்கஜ் வெர்மானி கூறுகையில், 'ரிலையன்சுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதன் மூலம் எங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உலகத் தரமான ஆடைகள், டிசைன்களை அளித்து வரும்குளோவியா பிராண்டும் இன்னும் பிரபலம் அடையும். வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் பிராண்டாக குளோவியா மாறுவதை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isha Ambani, Reliance, Reliance Retail