Home /News /business /

டன்சோவின் 25.8 சதவீத பங்குகளை கைப்பற்றிய ரிலையன்ஸ் ரீடெய்ல்!

டன்சோவின் 25.8 சதவீத பங்குகளை கைப்பற்றிய ரிலையன்ஸ் ரீடெய்ல்!

நாட்டின் மிகப்பெரிய விரைவு வணிக நிறுவனமாக திகழும் டன்சோ நிறுவனத்தின் மீதான பார்வையை மேம்படுத்துவதற்கு இந்த மூலதனம் பயன்படுத்தப்படும்.

நாட்டின் மிகப்பெரிய விரைவு வணிக நிறுவனமாக திகழும் டன்சோ நிறுவனத்தின் மீதான பார்வையை மேம்படுத்துவதற்கு இந்த மூலதனம் பயன்படுத்தப்படும்.

நாட்டின் மிகப்பெரிய விரைவு வணிக நிறுவனமாக திகழும் டன்சோ நிறுவனத்தின் மீதான பார்வையை மேம்படுத்துவதற்கு இந்த மூலதனம் பயன்படுத்தப்படும்.

    இந்தியாவின் முன்னணி விரைவு வர்த்தக நிறுவனமான டன்சோ, சமீபத்தில் 240 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவத்தின் தலைமையில் டன்சோ நிறுவனம் இந்த முதலீடுகளை பெற்றுள்ளது. அதன்படி, டன்சோவில், லைட்பாக்ஸ், லைட்ராக், 3எல் கேபிடல் மற்றும் ஆல்டேரியா கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    இதில், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ரூ.200 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ததன் மூலம் டன்சோ நிறுவனத்தின் 25.8 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்தச் சுற்று நிதி திரட்டல் மூலம், விதிவிலக்கான பயனர் அனுபவத்தை உருவாக்குவதில் டன்சோவின் திறன் மேற்படுகிறது. இதனால், ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் அது நிலைநிறுத்தியுள்ளது.

    நாட்டின் மிகப்பெரிய விரைவு வணிக நிறுவனமாக திகழும் டன்சோ நிறுவனத்தின் மீதான பார்வையை மேம்படுத்துவதற்கு இந்த மூலதனம் பயன்படுத்தப்படும், மேலும் மைக்ரோ கிடங்குகளின் நெட்வொர்க்கில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யும் அதே வேளையில் அதன் B2B வணிகத்தையும் விரிவுபடுத்தி இந்திய நகரங்களில் உள்ள உள்ளூர் வணிகர்களுக்கான தளவாடங்களைச் செயல்படுத்துகிறது.

    Also read... உலகின் முதல் $3 டிரில்லியன் மார்க்கெட் வேல்யூ நிறுவனமாக மாறிய ஆப்பிள்!

    50+ பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டக்கூடிய சந்தை வாய்ப்பைக் கொண்ட இந்தியாவில் விரைவான வர்த்தகப் பிரிவில் டன்சோ சந்தையில் முதலீடமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போது டன்சோ இந்தியாவில் உள்ள 7 மெட்ரோ நகரங்களில் செயல்படுகிறது. தொடர்ந்து, இந்த கூடுதல் மூலதனம் மூலம் விரைவான வர்த்தக வணிகத்தை 15 நகரங்களுக்கு விரிவுபடுத்த பயன்படுத்தப்படும்.

    டன்சோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரில் அதன் உடனடி டெலிவரி மாடலான ‘Dunzo Daily’ ஐ அறிமுகப்படுத்தியது, இது வாரத்தில் 20% வார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. டன்சோ டெய்லி மாடல் தினசரி மற்றும் வாராந்திர அத்தியாவசியப் பொருட்களை 15-20 நிமிடங்களுக்குள் வழங்குகிறது. இதில், உயர்தர பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

    நிதியுதவிக்கு கூடுதலாக, டன்சோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்கள் சில வணிக கூட்டாண்மைகளில் ஈடுபடும். அதில், டன்சோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் இயக்கப்படும் ரீடெய்ல் ஸ்டோர்களுக்கான ஹைப்பர்லோகல் லாஜிஸ்டிக்ஸை செயல்படுத்தும், மேலும் ரிலையன்ஸ் ரீடெய்லின் ஓம்னி-சேனல் திறன்களுக்கு மேலும் வலு சேர்க்கும். ஜியோ மார்ட்டின் வணிக நெட்வொர்க்கிற்கான கடைசி மைல் டெலிவரிகளையும் டன்சோ எளிதாக்கும்.

    ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் மற்றும் RIL குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனமானது மார்ச் 31, 2021 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ.157,629 கோடி ($ 21.6 பில்லியன்) ஒருங்கிணைந்த வருவாயை பெற்றது. அதில் நிகர லாபம் மட்டும் ரூ.5,481 கோடி ($ 750 மில்லியன்) என்று அறிவித்தது.

    Also read... ஸ்மார்ட் வாட்ச் இல்லாமல் Android மற்றும் iOS-ல் ஹார்ட் ரேட்டை அளவிடுவது எப்படி!

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Reliance Retail

    அடுத்த செய்தி