பிரபல காலணி நிறுவனமான xlerate(எஸ்லெரேட்) விற்பனையை தனது AJIO இ-காமர்ஸ் தளத்தில் ரிலையன்ஸ் சில்லறை நிறுவனம் துவங்கியுள்ளது. மேலும், xlerate நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் தனது புதிய வர்த்தக தளமான AJIO பிசினஸில் Xlerate என்ற அத்லீஷர் பிராண்டை அறிமுகப்படுத்தியதாக நவம்பர் 1 அன்று அறிவித்தது. Xlerate தனது முதல் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த பிராண்ட் உடற்பயிற்சி வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த காலணி, ஷூ, டி ஷர்ட், ட்ராக்ஸ் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதன் விற்பனை 699 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இளைஞர்களுக்கு சிறந்த ஸ்போர்ட்ஸ் ஆடைகளை குறைந்த விலையில் வழங்குவதில் Xlerate நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரத்யேகமாக அஜியோ தளத்தில் கிடைக்கும்.
விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் சிறிய கடைகள், பொட்டிக் என எந்த சில்லறை விற்பனையாளரும் அஜியோ தளத்தில் பதிவு செய்வதன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்யலாம்.
இது குறித்து ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ திரு. அகிலேஷ் பிரசாத் கூறுகையில், எஸ்லெரேட் சிறந்த மற்றும் மலிவு விலையான பொருட்கள் மூலம் நிச்சயமாக அதன் மதிப்பு உணர்வுள்ள நுகர்வோரை மகிழ்விக்கும். விளையாட்டு காலணிகள், செருப்புகள் மற்றும் ஆடை வகைகளில் அவர்களின் தேவைகளை பிராண்ட் பூர்த்தி செய்கிறது. வாழ்க்கையில் தடைகள் இல்லாமல் முன்னேற வேண்டும் என்ற அதன் உணர்வை எங்கள் பிராண்ட் அம்பாசிடர் ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்துகிறார்” என்று குறிப்பிட்டார்
எஸ்லெரேட் பிராண்ட் தூதர் ஹர்திக் பாண்டியா பேசுகையில், Xlerate உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மிகவும் ஸ்டைலான மற்றும் வசதியான தயாரிப்புகளைக் கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையைக் கொண்டிருக்கிறேன், இன்றைய இளைஞர்களும் அதே கண்ணோட்டத்தை நம்புவதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது' என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, Reliance Retail