ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ₹ 4.28 லட்சம் கோடியாக உயர்வு

அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 3675 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.4.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ₹ 4.28 லட்சம் கோடியாக உயர்வு
Reliance
  • News18
  • Last Updated: September 30, 2020, 2:15 PM IST
  • Share this:
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் மூன்றாயிரத்து 600 கோடி ரூபாயை ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஜியோவை தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே சில்வர்லேக், கே.கே.ஆர்.உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் முதலீடு செய்த நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், 3675 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது.

அதன்படி ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில், 0.84 சதவீத பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.28 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோவில் 6500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading