ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரிலையன்ஸ் Centro ஆடைகளுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோர் அறிமுகம்..!

ரிலையன்ஸ் Centro ஆடைகளுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோர் அறிமுகம்..!

ரிலையன்ஸ் சென்ட்ரோ

ரிலையன்ஸ் சென்ட்ரோ

Reliance Centro மூலம் பேஷன் துறையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi | Delhi

  பண்டிகை காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ரீடைல் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக ஆடை பிரிவில் புதிய வர்த்தகத்தைத் திறந்துள்ளது.

  மளிகை பொருட்களுக்கு எப்படி டிபார்ட்மென்டல் ஸ்டோர் இருக்கிறதோ, அதே பாணியில் ஆடைகளுக்கு ஒரு டிபார்ட்மென்ட்ல் ஸ்டோரை ரிலையன்ஸ் ரீடைல் திறந்துள்ளது. இது கட்டாயம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இது தொடர்பாக ரிலையன்ஸ் ரீடைல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோர்-ஐ ரிலையன்ஸ் சென்ட்ரோ (Reliance Centro) என்ற பெயரில் துவங்கியுள்ளதாகவும், இந்த Brand-ன் முதல் கடை டெல்லி வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  ரிலையன்ஸ் Centro

  Reliance Centro மூலம் பேஷன் துறையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் ஆடை, காலணி, காஸ்மெட்டிக்ஸ், உள்ளாடைகள் என அனைத்து உயர்தர வகையான பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படும் நோக்கில் திறக்கப்பட்டுள்ளது.

  ALSO READ | டைம் இதழின் உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி!

  டெல்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் கடையில், அறிமுக தள்ளுபடியாக ரூ.4,000க்கு பொருட்களை வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடியும், ரூ.5,000 ரூபாய்க்கு வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் டெல்லி மக்களுக்கு இது ஒரு சிறந்த தள்ளுபடியாக அமைந்துள்ளது.

  Published by:Anupriyam K
  First published: