பிக் பஜார் உள்ளிட்ட பியூச்சர் குரூப்பை வாங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்

இணைப்பு நடவடிக்கையின் மூலம் வீடுகளை புதுமையாக்குவதில் மகிழ்ச்சியடைவதாக ரிலையன்ஸ் ரீடையில் வெண்ட்சூர் நிறுவன இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்திருக்கிறார்.

பிக் பஜார் உள்ளிட்ட பியூச்சர் குரூப்பை வாங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்
Reliance
  • Share this:
பிக் பஜார் உட்பட பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், குடோன்களை 24,713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பியூச்சர் குரூப்பின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ரிலையன்ஸ் ரீடையில் வெண்ட்சூர் லிமிட்டெட் வசம் ஒப்படைக்கப்படும். அதில், ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிட்டெட்டில் முதலீடுகள் செய்யவும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Unlock4 | மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி... மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?

இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் வீடுகளை புதுமையாக்குவதில் மகிழ்ச்சியடைவதாக ரிலையன்ஸ் ரீடையில் வெண்ட்சூர் நிறுவன இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்திருக்கிறார்.

பியூச்சர் குரூப் நிறுவனத்தின் வணிகம் நவீன சில்லரை விற்பனையில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
First published: August 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading