• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரிது குமார் ப்ராண்டின் 52% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

ரிது குமார் ப்ராண்டின் 52% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிதிகா நிறுவனத்தின் 52 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

  • Share this:
    ரிலையன்ஸ ப்ராண்ட் நிறுவனம் கடந்த வாரம் 40 சதவீத பங்களுக்கு மனிஷ் மல்கோத்ராவின் பெயரிலான ப்ராண்டில் முதலீடு செய்தவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ரிதிகா நிறுவனத்தின் 52 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ரிதிகா நிறுவனத்தின் கீழ் ரிது குமார், லேபிள் ரிது குமார், ஆர் ரிது குமார், ஆர்கே, ரிதுகுமார் ஹோம்& லிவ்விங் நிறுவனங்கள் வருகின்றன.

    ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் மற்றும் டிசைனிங்கில் முன்னோடியாக உள்ள ரிதிகா நிறுவனம் இணைந்து இதுவரையில் வராத புதிய தயாரிப்புகளைக் கொண்டுவருவதற்கு முடிவு செய்துள்ளன. அதன்படி, இந்தியாவில் இதுவரையில் கைவினை மற்றும் துணிகளில் இந்தியாவின் கலைக் கலாச்சாரத்தை இப்போது இருக்கும் உடைவடிவமைப்பிலிருந்து மாறுபட்ட வடிவில் கொண்டுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக இயக்குநர் இஷா அம்பானி தெரிவிக்கையில், ‘வலுவான ப்ராண்ட் அடையாளம், ஃபேஷன் மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் புதுமை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ரிது குமாருடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து கூறுகளும் ஒன்றிணைந்து முழுமையான லைப்ஸ்டைல் ப்ராண்டை உருவாக்கும். நாங்கள் ஒருங்கிணைந்து இந்தியா மற்றும் உலக அளவில் நம்முடைய கலாச்சார ஆடைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கான நுகர்வோர் பன்முகத்தன்மை மற்றும் வலுவான தளத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால், எங்களுடைய படைப்புகள் சர்வதேச அடையாளத்தைப் பெறுதற்கான தகுதி வாய்ந்தவையாக உள்ளது.

    சந்தை மதிப்பீட்டின்படி, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கலாச்சார உடை சந்தையின் 1.5 லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது. 88 சதவீத கலாச்சார உடை சந்தை முறைசாரா வகையில் உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட சந்தையின் மதிப்பு 17,000 - 18,000 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தையில் 40 சதவீதம் வேல்யூ செக்மெண்ட் ப்ராண்டைச் சார்ந்தது. 30 சதவீதம் ப்ரிமியம் ப்ராண்டைச் சார்ந்தது. 30 சதவீதம் லக்சரி ப்ராண்டைச் சார்ந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: