Home /News /business /

உணவு துறையில் நுழையும் ரிலையன்ஸ்: பிரிட்டனின் பிரபலமான பிரெட் எ மஞ்சர் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது

உணவு துறையில் நுழையும் ரிலையன்ஸ்: பிரிட்டனின் பிரபலமான பிரெட் எ மஞ்சர் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

Pret a Manger: அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆசியா என 9 சந்தைகளில் சுமார் 550 கிளைகளை பிரெட் எ மஞ்சர் கொண்டுள்ளது.  ஆர்கானிக் காஃபி,  சண்ட்விச்,  சாலட் போன்றவை இங்கு விற்கப்படுகிறது. 

    ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், பிரிட்டனின் புகழ்பெற்ற சர்வதேச உணவு மற்றும் காஃபி சங்கிலியான பிரெட் எ மஞ்சர் நிறுவனம் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிரெட் எ மஞ்சர் நிறுவனத்தின் கடைகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஃபிரன்சிஸ் தொடர்பாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    பிரெட் எ மஞ்சர்(Pret a Manger) என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு ‘ உண்ண தயார்’ என பொருள். பிரெட் எ மஞ்சர்  நிறுவனத்தின் முதல் கடை லண்டனில் 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  கைகளால் தயாரிக்கப்படும் உணவுகளை தினமும் புதுசாக தயாரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த கடை திறக்கப்பட்டது. 35 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆசியா என 9 சந்தைகளில் சுமார் 550 கிளைகளை பிரெட் எ மஞ்சர் கொண்டுள்ளது.  ஆர்கானிக் காஃபி,  சண்ட்விச்,  சாலட் போன்றவை இங்கு விற்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் 14 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச பொருட்களை சந்தைப்படுத்திவரும் ரிலையன்ஸ் பிராண்ட் லிமிடெட்ஸ் நிறுவனம், இந்தியாவில் பிரெட் எ மஞ்சர் நிறுவனத்தின் கிளைகளை பிரான்சிஸ் முறையில் நடத்துவது தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இது குறித்து ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தர்ஷன் மேத்தா கூறுகையில், பிரெட் எ மஞ்சர் நிறுவனத்துடனான எங்களது கூட்டாண்மை என்பது  இந்தியாவின் உணவு மற்றும் பான தொழில் மற்றும் ஒரு பிராண்டாக பிரெட் என இரண்டிலும் வலுவாக வேரூன்றியுள்ளது. இந்திய நுகர்வோர்களின் நாடி துடிப்பை ஆர்பிஎல் நன்றாக கவனித்து வருகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்தியர்களுக்கு ஃபிரஸ் மற்றும் ஆர்கானிக் முறையிலான உணவுகளை நாட தொடங்கியுள்ளனர். பிரெட் எ மஞ்சர் என்ன வழங்குகிறதோ அதனுடன் ஒத்ததாக இது உள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிக்கான செய்முறையாகும்’ என தெரிவித்துள்ளார்.

    இந்த ஒப்பந்தம் குறித்து பிரெட் எ மஞ்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பனோ கிறிஸ்டோ கூறுகையில், இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, நாங்கள் ஆசியாவில் பிரெட்டின் முதல் கடையைத் திறந்தோம்
    புதிதாக தயாரிக்கப்பட்ட உணவையும் 100% ஆர்கானிக் காபியையும் கண்டம் முழுவதும் நகரங்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அனைவரின் விருப்பகாம உள்ளது. சந்தைகளில் பல வருடம் அனுபவம் உள்ள ரிலையன்ஸ் பிராண்ட் லிமிடெட் இதனை சாத்தியமாக்குவதற்கும் எங்களின்  பிராண்டை வெற்றி அடைய செய்யவும் உதவும்.  அவர்களுடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமாக உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Business, Food, Reliance

    அடுத்த செய்தி