முகப்பு /செய்தி /வணிகம் / சூரியசக்தி மின்சாரம்: அமெரிக்காவின் Ampri நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு

சூரியசக்தி மின்சாரம்: அமெரிக்காவின் Ampri நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு

சூரிய சக்தி மின்சாரம்

சூரிய சக்தி மின்சாரம்

ரிலையன்ஸ் மற்றும் ஆம்பிரி நிறுவனம் இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான பேட்டரி உற்பத்தி மையத்தை அமைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனம் ( ஆர்என்இஎஸ்எல்)அமெரிக்காவை சேர்ந்த ஆற்றல் சேமிப்பு நிறுவனமான ஆம்பிரியில் 42.3 மில்லியன் பங்குகளைப் பெற 50 மில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீடானது நிறுவனத்தை வணிகமயமாக்கவும் மற்றும் அதன் நீண்ட கால ஆற்றல் சேமிப்பின் வணிகத்தை உலகளவில் வளர்க்கவும் உதவும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் ஆம்பிரி நிறுவனம் இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான பேட்டரி உற்பத்தி மையத்தை அமைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு நடந்த ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்கின் போது பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, எரிசக்தி ஆற்றலை சேமிப்பதற்காக ஜாம்நகரில் ஜிகா தொழிற்சாலையை கட்டும் திட்டத்தை அறிவித்திருந்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Business, Reliance, Reliance Retail