Reliance Just Dial Deal : ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 66% பங்குகளை வாங்குகிறது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்தவுள்ளது.

  • Share this:
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,” ஜஸ்ட் டயல்” நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அதன்படி, ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3 ஆயிரத்து 497 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.

    ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த பங்கு கைப்பற்றுதலுக்கு பிறகும் வி.எஸ்.எஸ் மணி ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாக ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் இயக்குநர் ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: