ரிலையன்ஸ் ஜியோ யூசர்கள் தற்போது வாட்ஸ்அப்-பிலேயே ரீசார்ச் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜியோ சிம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது யூசர்களுக்காக ஒரு புதிய வாட்ஸ்அப் பாட்-ஐ உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி ஜியோ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ சிம் ரீசார்ஜ் தவிர, புதிய ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்குவது அல்லது சிம் போர்ட்டபிலிட்டி (எம்.என்.பி)க்கு விண்ணப்பிப்பது போன்ற பல சேவைகளையும் பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பிரத்யேக வாட்ஸ்அப் சாட்பாட் ‘ஜியோகேர்’ நேரடியாக ரீசார்ஜ் செய்யும் வகையில் புதிய சேவையை சேர்த்துள்ளது.
Also Read : ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிப்பு
கட்டணம் செலுத்துவதற்கு யூசர்கள் GPay, PhonePe, Amazon Pay, Paytm மற்றும் பிற e-wallets போன்ற ரீசார்ஜ் விருப்பங்களுக்கு இடையில் தேர்வு செய்யலாம்.
கூடுதலாக, யூசர்கள் மற்றொரு யூசரின் எண்ணை ஜியோகேர் வாட்ஸ்அப் சாட்பாட் வழியாக ரீசார்ஜ் செய்வதற்கான வாய்ப்பையும் கொண்டுள்ளனர். ஜியோ சிம் ரீசார்ஜ் தவிர, யூசர்கள் புதிய ரிலையன்ஸ் ஜியோ சிம் அல்லது சிம் போர்ட்டபிலிட்டி (எம்.என்.பி) க்கு விண்ணப்பிப்பது போன்ற பல சேவைகளையும் பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜியோகேர் வாட்ஸ்அப் சாட்பாட் ஜியோ சிம், ஜியோ ஃபைபர் இன்டர்நெட், ஜியோமார்ட் மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் போன்ற பல சேவைகளை வழங்குகிறது. யூசர்கள் மொழியை மாற்ற விரும்பினால், ‘change chat language’ என்பதைத் தேர்ந்தெடுத்து இந்தி அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தற்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் சில மொழிகள் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளனர்.
Also Read : உஷார்...! உங்கள் மொபைலில் இந்த 5 செயலிகள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்
குறிப்பிடத்தக்க வகையில், யூசர்கள் சாட்போட் வழியாக COVID-19 தொடர்பான தகவல்களையும் பெற முடியும். அந்த சாட்டில் உள்ள மெனுவில் இருந்து ‘Covid vaccine and info’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘vaccine info' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதிலிருந்து யூசர்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள் அல்லது தடுப்பூசி தொடர்பான தகவல்களையும் பெற்று கொள்ளலாம்.
இந்த தகவல்களை காட்ட ஜியோகேர் வாட்ஸ்அப் சாட்பாட் sixdigit pin குறியீட்டைக் கேட்கும். மாற்றாக, வாடிக்கையாளர்கள் JioFiber அல்லது உங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்வதற்காக ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ MyJio app-ஐ பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப் பல்வேறு சேவைகளை உங்களுக்கு வழங்கும். அதாவது தங்கள் பரிவர்த்தனைகள், இருப்பு, தரவு காலாவதி மற்றும் பலவற்றின் முழு விவரங்களையும் இந்த ஆப் மூலம் பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio