• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Reliance Jio: 2ம் காலாண்டில் ரூ.3,528 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

Reliance Jio: 2ம் காலாண்டில் ரூ.3,528 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) வருவாய் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் ரூ.17,994 கோடியாக இருந்த நிகர வருவாய் 2ம் காலாண்டில் ரூ.18,735 கோடியாக அதிகரித்துள்ளது.

  • Share this:
    செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. இதில், 2ம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் முழுமையான நிகர லாபம் ரூ.3,528 கோடி என்று தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ( Reliance Industries (RIL)) ஒரு அங்கமான  ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் காலாண்டில் தங்களது  முழுமையான நிகர லாபம் ரூ.3,528 கோடி என்று  ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிந்த முதலாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,501 கோடி ஆகும்.  இதேபோல், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் ரூ.17,994 கோடியாக இருந்த நிகர வருவாய் 2ம் காலாண்டில் ரூ.18,735 கோடியாக அதிகரித்துள்ளது.

    தனி வருவாய், வட்டி, தேய்மானம் மற்றும் தள்ளுபடிக்கு முன் (EBITDA) ரூ .8,989 கோடியாக உள்ளது.  மார்ஜின் 48 சதவீதமாக இருந்தது.  செப்டம்பர் மாதத்தில்   ஒரு பயனர் மூலம் பெறும் சராசரி வருவாயாக  (ARPU) 143.6 ரூபாயை ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இது ரூ.138.40 ஆக இருந்தது.

    இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் 7 லட்சம் ரிட்டன் கிடைக்கும்... வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!


    செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் மொத்த டேட்டா போக்குவரத்து ( data traffic)  50.9% வளர்ச்சி பெற்று 23.0 பில்லியன் ஜிபி ஆக அதிகரித்திருந்தது. செப்டம்பர் 30ம் தேதி முடிவில் ஜியோவின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை 42.95 கோடி (429.5 million ) ஆகும். இதில், 2.38 கோடி பேர் புதிய பயனர்கள் ஆவர்.

    2ம் காலாண்டில்  ஒரு மாதத்திற்கான ஒரு பயனரின் சராசரி டேட்டா நுகர்வு என்பது  17.6 ஜிபி ஆகவும்  அழைப்பு நுகர்வு 840 நிமிடங்களாகவும்  அதிகரித்துள்ளது.

    தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) அதிக அளவில் கிடைக்க ஜியோ மற்றும் கூகுள் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: