ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரிலையன்ஸ் ஜியோ நிறுனத்தின் லாபம் 28 சதவீதம் உயர்வு

ரிலையன்ஸ் ஜியோ நிறுனத்தின் லாபம் 28 சதவீதம் உயர்வு

ஜியோ

ஜியோ

Reliance Jio | ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 28 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2022 ஆம் ஆண்டின் 3வது காலாண்டு இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 28 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது நிகர லாபமாக அந்நிறுவனத்துக்கு ரூ.4,638 கோடி கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய வருடம் டிசம்பரில் 3வது காலாண்டு இறுதியில் ரூ. 3,615 கோடி நிகர லாபம் கிடைத்திருந்தது.

மேலும் இந்த நிறுவனத்தின் மொத்த லாபம் 18.9 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வருடம் அந்நிறுவனத்துக்கு ரூ.19,347 கோடி லாபமாக கிடைத்திருந்தது. ஈபிட்டா எனப்படும் வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவுகள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாயானது ரூ. 12,009 கோடியாக உள்ளது.

மேலும் கடந்த ஆண்டின் 3வது காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் செலவுகள் ரூ.16, 839 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செலவுகள் ரூ.14,655 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை  தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அண்மையில், தமிழ்நாட்டின் மதுரை, கோவை, திருச்சி உட்பட 6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது.

First published:

Tags: Jio, Jio 5G, Reliance