ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பெரும் பலனளிக்கும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி!

ஜியோ- மைக்ரோசாஃப்ட்

கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் மீது முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்று நடந்த ஜியோ 42-வது வருடாந்திர மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனான நீண்ட கால கூட்டணி குறித்த அறிவிப்பை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி மூலம் புதிதாக உருவாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மைக்ரோசாஃப்ட்-ன் க்ளவுட் சேவை (மேகக்கணிமை) மற்றும் இணைய சேவை ஆகியவை இலவசமாகவே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் வழங்கும் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகிய இரண்டு சேவைகளுமே இலவசமாகவே கிடைக்கும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஜியோ ஃபைபரின் சேவை உடன் மைக்ரோசாஃப்ட் சேவையும் இலவசமாகவே வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளனர். சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் சாதாரணமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவிடும் சாஃப்ட்வேர்-ஹார்டுவேர் சேவைகளை வெறும் 1,500 ரூபாய்க்கு வழங்கப்போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதேபோல், கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் மீது முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்யா நாடெல்லா கூறுகையில், “Azure, Azure AI மற்றும் Office 365 ஆகியவற்றின் திறனை ஜியோ உடனான கூட்டணி மூலம் இனி இந்தியாவின் பல தொழில்களுக்கும் அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதான கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தக் கூட்டணி உதவும்” என்றார்.

மேலும் பார்க்க: புதிய திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்- அதிரடி அம்சங்களுடன் ஜியோ ஃபைபர்
Published by:Rahini M
First published: