• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Reliance Jio Freedom plan அறிமுகம்: இனி தினசரி லிமிட் இன்றி டேட்டா பயன்படுத்துங்கள்!

Reliance Jio Freedom plan அறிமுகம்: இனி தினசரி லிமிட் இன்றி டேட்டா பயன்படுத்துங்கள்!

ஜியோ

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஃப்ரீடம் பிளான்கள் ₹ 127ல் தொடங்கி ₹ 2,397 வரை உள்ளது. இந்த திட்டங்களில் இலவச குரல் அழைப்பு மற்றும் ஜியோ தளங்களுக்கான சந்தாவும் அடங்கும்.

  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக இருந்துவரும் ரிலையன்ஸ் ஜியோ, பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. அதன் ப்ரீபெய்ட் பிளான்கள் மற்ற நிறுவனங்களின் பிளான்களை விட மலிவு என்பதால் மிகவும் பிரபலமானவையாகவும் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது ஃப்ரீடம் பிளான்கள் என்ற பெயரில் புதிய 5 பிளான்களை அறிவித்துள்ளது ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஃப்ரீடம் பிளான்கள் ₹ 127ல் தொடங்கி ₹ 2,397 வரை உள்ளது. இந்த திட்டங்களில் இலவச குரல் அழைப்பு மற்றும் ஜியோ தளங்களுக்கான சந்தாவும் அடங்கும்.

* ரூ. 127 பிளான் : இந்த விலை மலிவான ஃப்ரீடம் பிளான் 15 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 12 ஜிபி டேட்டாவுடன் தினசரி லிமிட் இல்லாமல் வழங்குகிறது. கூடுதலாக, ஜியோ யூசர்கள் JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud-க்கான அணுக்கலையும் பெறுகிறார்கள்.

Also Read  : மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

* ரூ. 247 பிளான் : இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள் மற்றும் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் அனைத்து இலவச ஜியோ சேவைகளுக்கான அணுகலும் கிடைக்கிறது. இந்த அனைத்து ஃப்ரீடம் பிளான்களிலும் இலவச அழைப்புகள் உள்ளது. மேலும் தினசரி 100 SMS நன்மைகளுடன் செல்லுபடியாகும் வேலிடிட்டி நாட்கள் வரை தொடர்ந்து வழங்குகின்றது.

* ரூ. 447 பிளான் : இந்த பிளானிங் வேலிடிட்டி 60 நாட்கள் மற்றும் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அனைத்து ஜியோ சேவை நன்மைகளையும் பெறுகிறது.

* ரூ. 597 திட்டம்: இந்த பிளான் 90 நாட்கள் செல்லுபடியாகும், 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது இலவச அழைப்பு, JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுகிறது.

Also read:   அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

* ரூ. 2,397 திட்டம்: இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி வரம்பு இல்லாமல் 365 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. இது அதிகபட்ச செல்லுபடியாகும் மற்றும் டேட்டாவுடன் கூடிய மிகவும் விலையுயர்ந்த ஃப்ரீடம் பிளானாகும்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த புதிய திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் அதிக அளவு டேட்டா தேவைப்படும் யூசர்களுக்கு ஏற்றது. தினசரி லிமிட் இல்லாமல் FUP காரணமாக யூசர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பிளான்கள் அனைத்தும் ஜியோ நிறுவனத்தின் வலைத்தளம், ஆப் மற்றும் மூன்றாம் தரப்பு தளங்களிலும் கிடைக்கிறது. இனிமேல் தினசரி FUP டேட்டா வரம்பு தீர்ந்துவிடுமோ என்ற கவலையே இல்லாமல், யூசர்களின் சொந்த டேட்டா தேவைக்கு ஏற்றார் போல் இனி டேட்டாவை செலவிட முடியும். எனவே ஜியோவின் இந்த திட்டங்கள் நிச்சயம் அதிக யூசர்களால் ரீசார்ஜ் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: