ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுக்கான புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. தற்போது, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஹாட்ஸாட்ரை விரும்பி பார்க்கும் வாடிக்கையாளர் வசதிக்காக, இந்த குறுகிய கால சிறப்புத் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வரை, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒரு வருட சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை மட்டுமே வைத்திருந்த நிலையில், தற்போது தனது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 28 நாள்கள், 56 நாள்கள்,84 வேலிடிட்டியுடன் ரூ.151, ரூ.333, ரூ.583, ரூ.783 ஆகிய கட்டணங்களுக்கு சிறப்பு திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.
திட்டங்களின் விவரம் இதோ:
ரூ.151 ப்ரீப்பெய்டு திட்டம்
இது ஏற்கனவே ப்ரீப்பெய்டு திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ஆக்டிவேட் ஆகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் மூன்று மாத டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 8 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
ரூ.333 ப்ரீபெய்டு திட்டம்
இந்த திட்டத்தில் வாடிக்கையளர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் 28 வெலிடிட்டி உடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ நியூஸ் ஆகிய ஜியோ செயலிகளின் சேவை கிடைக்கும்.
ரூ.583 ப்ரீபெய்டு திட்டம்
இந்த திட்டத்தின் வெலிடிட்டி 56 நாள்களாகும். வாடிக்கையளர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் மூன்று மாத வெலிடிட்டி உடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ நியூஸ் ஆகிய ஜியோ செயலிகளின் சேவை கிடைக்கும்.
ரூ.783 ப்ரீப்பெய்டு திட்டம்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்களாகும். இந்த திட்டத்தில் மேற்கண்டதைப் போல், தினசரி டேட்டா,இலவச வாய்ஸ் கால், எஸ்எம்ஸ் ஆகிவற்றுடன் 84 நாள் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:
விரைவில் வருகிறது சோட்டா பீம் வீடியோகேம் - அறிமுகம் செய்யும் ஜியோ கேம்ஸ்
இந்த திட்டத்தை ஜியோ வாடிக்கையாளர்கள் வழக்கம் போல திட்டத்தின் தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்தப்பின், டிஸ்னி ஹாட்ஸாட்ரில் தங்களின் அதே ஜியோ எண்ணை வைத்தே Sign In செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை டைப் செய்து வெற்றிகரமாக Sign In செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் மற்ற ரீசார்ஜ் பிளான்களையும் தடையின்றி பெற்றுக்கொள்ளாலம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.