ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளி ஸ்பெஷல்.. ஜியோ, வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்!

தீபாவளி ஸ்பெஷல்.. ஜியோ, வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்!

ஜியோ, விஐ

ஜியோ, விஐ

Jio and Vi Diwali Offers 2022 | ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ ஆகியவை தீபாவளி கொண்டாட்டங்களுடன் ஸ்பெஷல் தீபாவளி ரீசார்ஜ் ஆஃபர்களை அறிமுகப்படுத்தி உள்ளன.

இந்த பண்டிகை காலத்தில் மற்றொரு முன்னணி நிறுவனமான ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரியவில்லை. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

முதலில் ஜியோ தனது யூஸர்களுக்கு வழங்கும் ஸ்பெஷல் ரீசார்ஜ் டீல்கள் பற்றி பார்த்து விடலாம்.

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக் ஒன்றை 4ஜி ப்ரீபெய்ட் யூஸர்களுக்காக ஜியோ அறிவித்து இருக்கிறது. இந்த 1 வருட பிளானில் இன்டர்நெட் டேட்டா, வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்ற சில கூடுதல் நன்மைகளும் அடங்கும். இந்த பிளானின் விலை ரூ.2,999 ஆகும். இந்த ஆஃபரின் ஒரு பகுதியாக யூஸர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா என்ற வகையில் 365 நாட்களுக்கு மொத்தம் 912 ஜிபி டேட்டா வழங்கப்படும். அத்துடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். தவிர இது ஸ்பெஷல் பிளான் என்பதால் கூடுதலாக 75ஜிபி கூடுதல் டேட்டாவையும் ஜியோ வழங்குகிறது.

மேலும் யூஸர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற Jio ஆப்ஸ்களுக்கான அக்சஸை பெறுவார்கள். தவிர ஃபெர்ன்ஸ் & பெட்டல்ஸிலிருந்து ரூ.150 தள்ளுபடி, இக்ஸிகோவில் இருந்து விமான முன்பதிவுகளுக்கு ரூ.750 தள்ளுபடி, அஜியோவில் ரூ.1000, அர்பன் லேடரில் ரூ.1,500 மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,000 தள்ளுபடி ஆகியவை தீபாவளி கொண்டாட்ட நன்மைகளின் ஒரு பகுதியாகும்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

விஐ (Vi) ஸ்பெஷல் ஆஃபர்ஸ்:

தீபாவளி ஆஃபர்களின் ஒரு பகுதியாக Vodafone-Idea நிறுவனம் 3 ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்டுள்ளது. தீபாவளி முடிந்தாலும் Vi யூஸர்கள் அக்டோபர் 31 வரை இந்த ஆஃபர்களை பயன்படுத்தி இலவச கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.

ரூ.1,449 மதிப்பிலான ஸ்பெஷல் பிளானில் அன்லிமிட்டட் கால்ஸ் 180 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 SMS உள்ளிட்டவை அடங்கும். மேலும் இந்த ரீசார்ஜ் பிளானில் 180 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டா & 50ஜிபி கூடுதல் டேட்டாமற்றும் தினமும் நள்ளிரவு 12 முதல் காலை 6:00 மணி வரை இலவச இன்டர்நெட் அக்சஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரை இந்த பிளான் சப்போர்ட் செய்கிறது.

- இதேபோல் மற்றொரு ஸ்பெஷல் ரீசார்ஜ் பிளானான 365 நாள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,899 ஸ்கீமில்,மேலே உள்ள ரூ.1,449 பிளானில் உள்ள அனைத்து சலுகையும் அடங்கும். ஆனால் 50ஜிபி கூடுதல் டேட்டாவிற்கு பதிலாக இதில் 75ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறீர்களா.? இந்த விஷயங்களை முதலில் கவனிங்க

- 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.3,099 ரீசார்ஜ் பிளான் நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 75ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது. இந்த ஸ்கீமுடன் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் யூஸர்கள் பெறுவார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Deepavali, Recharge Plan, Reliance Jio, Vodafone