Home /News /business /

31 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ.. முதலிடத்தை தக்க வைத்தது

31 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ.. முதலிடத்தை தக்க வைத்தது

ஜியோ

ஜியோ

Reliance jio: மே மாதத்தில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 31 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. 

    ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 31 லட்சம் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.87 கோடியாக உயர்ந்துள்ளது.

    ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் முதன்முறையான குறைந்த விலையில் அன்லிமிடட் இணைய வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் கவர்ந்தது. தற்போது தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் ஜியோ உள்ளது.

    இந்நிலையில், தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்களை டிராய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 31 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.87 கோடியாக உயர்ந்துள்ளது.

    சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் 10.27 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த  வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 36.21 கோடியாக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிப்பு

    அதேவேளையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் 7.59 லட்சம் வாடிக்கையாளர்களை  இந்த காலக்கட்டத்தில் இழந்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.84 கோடியாக சரிந்தது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Reliance Jio, Telecom, TRAI

    அடுத்த செய்தி