ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியல்: இந்தியாவில் முதலிடம், உலகளவில் 53வது இடைத்தை பிடித்து அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம்!

ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியல்: இந்தியாவில் முதலிடம், உலகளவில் 53வது இடைத்தை பிடித்து அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்தியாவில் முதலிடம், உலகளவில் 53வது இடைத்தை பிடித்து அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்தியாவில் முதலிடம், உலகளவில் 53வது இடைத்தை பிடித்து அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம்!

Forbes’ Global 2000 list | இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியலில் இந்தியளவில் முதலிடமும், உலகளவில் 53வது இடமும் பிடித்து அசத்தியுள்ளது.

  இந்தியாவில் மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிய முதல் நிறுவனம் என்ற சிறப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

  உலகளவில் நிகர சொத்துமதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையில் கம்பெனிகளை ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வருகிறது. அந்தவகையில், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 2,000 நிறுவனங்களின் தரவரிசையை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

  அதில், இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதேபோல், தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை  இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளன.

  அதேநேரத்தில் உலகளவில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 53வது இடத்தை பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 105வது இடத்திலும், எச்டிஎஃப்சி வங்கி 153வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 204வது இடத்திலும் உள்ளன.

  இந்த பட்டியலில் உள்ள மற்ற டாப் 10 இந்திய நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான (ONGC) உலகளவில் 228வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளது.

  இந்த பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் (TCS) உலகளவில் 384 வது இடத்திலும், இந்திய அளவில் 8வது இடத்திலும் உள்ளது.

  முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 90.7 அமெரிக்க பில்லியன் டாலர்களாக இருந்தது. இதன்மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 10வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Forbes, Mukesh ambani, Reliance