• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உலகின் சிறந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

உலகின் சிறந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

Reliance

Reliance

உலகளவில் சிறந்த நிறுவனமாக தென் கொரியாவின் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது.

  • Share this:
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் உலகின் சிறந்த 750 நிறுவனங்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் சிறந்த நிறுவனமாக முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்தியாவில் வருவாய், லாபம் மற்றும் சந்தை மூலதனம் என அனைத்து வகையிலும் மிகப்பெரிய நிறுவனமாக விளங்ககூடிய ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. சாம்சங், பிலிப்ஸ், பிஃபிசர், இண்டெல் போன்ற உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளடக்கிய உலகின் சிறந்த 750 நிறுவனங்களின் பட்டியலில், பிற இந்திய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் முதலிடம் பிடித்துள்ளது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தெந்த இடம்?

உலக அளவில் ரிலையன்ஸ் நிறுவனம் 52வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 100 இடங்களை பிடித்த பிற இந்திய நிறுவனங்களின் வரிசையில் ஐசிஐசிஐ வங்கி 65வது இடத்தையும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 77வது இடத்தையும், ஹெச்.சி.எல் நிறுவனம் 90வது இடத்தையும் பிடித்துள்ளன.

இவை தவிர எஸ்.பி.ஐ வங்கி 119வது இடத்தையும், எல் & டி நிறுவனம் 127வது இடத்தையும், எல்.ஐ.சி 504வது இடத்தையும், இன்ஃபோசிஸ் 588வது இடத்தையும், டாடா குரூப் 746வது இடத்தையும் பிடித்துள்ளன.

Also read: முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் – அம்பலப்படுத்திய கடிதம்!

பஜாஜ் (215), ஆக்ஸிஸ் வங்கி (254), இந்தியன் வங்கி (314), ஓ.என்.ஜி.சி (404), அமரராஜா குரூப் (405), கோட்டக் மஹிந்திரா வங்கி (418), பேங்க் ஆஃப் இந்தியா (451) ஐடிசி (453), சிப்லா (460), பேங்க் ஆஃப் பரோடா (496) போன்ற இந்திய நிறுவனங்களும் 750 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

உலகளவில் சிறந்த நிறுவனமாக தென் கொரியாவின் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தை ஐபிஎம், 3வது இடத்தை மைக்ரோசாஃப்ட், 4வது இடத்தை அமேசான், 5வது இடத்தை ஆப்பிள், 6வது இடத்தை ஆல்ஃபாபெட், 7வது இடத்தை டெல் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. சீனாவின் ஹுவாவே நிறுவனம் 8வது இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: காங்கிரஸ் கூட்டணிக்கு நோ… புது ரூட்டில் அகிலேஷ் யாதவ்..

எதன் அடிப்படையில் மதிப்பீடு?

நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு வகைகளில் தங்களின் நிறுவனங்களை மதிப்பிட்டதன் அடிப்படையில் இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.

Statista என்ற சந்தை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் இதற்காக கைகோர்த்த ஃபோர்ப்ஸ், 58 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1.50 லட்சத்துக்கும் அதிகமான முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களிடம் இருந்து பெற்ற மதிப்பீட்டு தரவுகளின் அடிப்படையில் இந்த 750 நிறுவனங்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

Also read:   கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் – உலக வங்கி தகவல்

இதில் கலந்து கொண்டவர்கள் நிறுவனத்தினுடைய இமேஜ், பொருளாதார பின்புலம், திறன் மேம்பாடு, பாலின சமத்துவம், சமூக பொறுப்புணர்வு போன்ற காரணிகளை கொண்டு மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் இந்த ஆய்வில் கிடைத்த அதிகபட்ச மதிப்பீடுகளை பொறுத்தே முதல் 750 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: