ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைகிறது ரிலையன்ஸ் மீடியா..!

ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைகிறது ரிலையன்ஸ் மீடியா..!
ரிலையன்ஸ்
  • Share this:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மீடியா மற்றும் விநியோகத்தை ஒரு நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைத்து, நெட்வொர்க் 18 ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வணிகமாக மாற்றப்படுகிறது.

அதன்படி, டிவி 18 ஒளிபரப்பு, ஹாத்வே கேபிள் மற்றும் இண்டர்நெட், டென் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் நெட்வொர்க் 18 என்னும் ஒருங்கிணைந்த அமைப்பாகத் தொடரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பு மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊடக நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுக்கும். இதனால், ஆண்டு வருவாய் 8,000 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு மூலமாக, நெட்வொர்க் ஊடகத் துறையில் பிரதான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். கடன் இல்லா நிலையை தக்கவைத்துக்கொள்வதுடன், நிலையான வளர்ச்சியையும் அடைய முடியும். டிஜிட்டல், ப்ராட்காஸ்ட், கேபிள் மற்றும் ப்ராண்பாண்ட் ஆகிய பிரிவுகளில் வளர்ச்சி வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள முடியும். 
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்