குஜராத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு!

ரிலையன்ஸ் பிறந்த இடமும், பணிபுரியும் பூமியாகவும் குஜராத் உள்ளது என்றார் முகேஷ் அம்பானி.

news18
Updated: January 19, 2019, 9:02 PM IST
குஜராத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு!
முகேஷ் அம்பானி
news18
Updated: January 19, 2019, 9:02 PM IST
குஜராத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி உள்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பிரதான வணிகமாக எண்ணெய் சுத்திகரிப்பை குஜராத்தில் அதிகளவில் செய்து வருகிறது. ரிலையன்ஸ் பிறந்த இடமும், பணிபுரியும் பூமியாகவும் குஜராத் உள்ளது.

டெலிகாம் துறையில் ஜியோவை நம்பர் 1 இடத்துக்குக் கொண்டு வர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கில் முதலீடுகளைக் குவித்துள்ளது. இதுவரை நாங்கள் குஜராத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைச் செய்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் இதை  இரட்டிப்பாக்குவோம்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. விரைவில் இ-காமர்ஸ் வணிகத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதில் சிறு வணிகர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவரும் மிகப்பெரிய பயனடைவார்கள்.

மேலும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் குஜராத்தில் பண்டிட் தீன்தயாள் பல்கலைக்கழகத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற 150 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: தனியார் ரயில்களை இயக்க ரயில்வே பரிசீலனை
First published: January 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...