ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் பங்கேற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43-வது வருடாந்திர பொதுக்கூட்டம்

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸின் 43-வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் பங்கேற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43-வது வருடாந்திர பொதுக்கூட்டம்
முகேஷ் அம்பானி
  • Share this:
உலக அளவில் ஆறாவது பெரும் பணக்காரராகவும், ஆசியக் கண்டத்தின் முதல் பணக்காரராகவும் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று முதன்முறையாக இந்த உயரத்தை எட்டியுள்ளது.

எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் ரிலையன்ஸ் முன்னணி நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர்(virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் பங்கேற்கவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பங்குகளை ஈர்த்தன் மூலம் கடனில்லாத நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading