ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு!

Web Desk | news18
Updated: July 19, 2019, 10:24 PM IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 7% அதிகரிப்பு!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்
Web Desk | news18
Updated: July 19, 2019, 10:24 PM IST
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 6.82 சதவீதமாக உயர்ந்து, 10,104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தெரிவித்துள்ளது.

முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் 1.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

பெட்ரோ கெமிக்கஸ் வணிகத்தில் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் 7,857 கோடி ரூபாயாக இருந்த வரிக்கு முந்தைய வருவாய் 7,508 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 45.60 சதவீதம் அதிகரித்து 891 கோடி ரூபாயாக உள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 3.38 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளார்கள்.

எண்ணெய் சுத்திகரிப்பின் வருவாய் 5,315 கோடி ரூபாயிலிருந்து 4,508 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. ரீடெயில் வணிகத்தின் வருவாய் 1,069 கோடி ரூபாயிலிருந்து 1,777 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அறிக்கையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வெளியிட இருந்த நிலையில் அதன் பங்குகளில் 12.80 புள்ளிகள் என 1.01 சதவீதம் சரிந்து 1,249 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் பார்க்க:
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...