10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்..!

முகேஷ் அம்பானி.
- News18 Tamil
- Last Updated: November 28, 2019, 9:01 PM IST
10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய மைல்கல்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகம் தொடங்கிய போது 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 1581.60 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 1121 ரூபாயாக பங்கு மதிப்பு இருந்தது. தற்போது இது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் 10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற மைல்கல்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எட்டியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அடுத்த இடத்தில் 7.81 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. பின்னர் கடந்த அக்டோபரில் இதன் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் ஒரே மாதத்தில் தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மகத்தான இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
சுத்திகரிப்பு தொழிலில் அதிக லாபம், டெலிகாம் கட்டண உயர்வு, எரிவாய் உற்பத்தியை ஆரம்பித்தது, முதலீட்டு செலவினங்களை குறைத்தது போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகம் தொடங்கிய போது 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 1581.60 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 1121 ரூபாயாக பங்கு மதிப்பு இருந்தது. தற்போது இது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் 10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற மைல்கல்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எட்டியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அடுத்த இடத்தில் 7.81 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது.
சுத்திகரிப்பு தொழிலில் அதிக லாபம், டெலிகாம் கட்டண உயர்வு, எரிவாய் உற்பத்தியை ஆரம்பித்தது, முதலீட்டு செலவினங்களை குறைத்தது போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.