உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகள் சந்தையின் முன்னணி வழங்குநரான சான்மினா கார்ப்பரேஷனுடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சான்மினா கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ், 50.1 % பங்குகளை உடன் வைத்திருக்கிறது, மீதமுள்ள 49.9% சன்மினா வசம் உள்ளது. RSBVL முதன்மையாக சான்மினாவின் தற்போதைய இந்திய யூனிட்டின் புதிய பங்குகளில் ரூ.1,670 கோடியில் முதலீடு செய்வதன் மூலம் இந்த உரிமையைப் பெற திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர், ஆகாஷ் அம்பானி, இந்தியாவில் உயர் தொழில்நுட்ப உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்பில் நுழைவதற்கு சான்மினாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும், புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் நமது பாதையை பட்டியலிடும்போது, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், தரவு மையங்கள், கிளவுட், 5ஜி, புதிய ஆற்றல் மற்றும் பிற தொழில்களில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம்.இந்தியாவில் புதுமை மற்றும் திறமையை அதிகரிக்கவும், இந்திய மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.