Home /News /business /

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45ஆவது வருடாந்திர கூட்டம் இன்று.. சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45ஆவது வருடாந்திர கூட்டம் இன்று.. சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு

2022 ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம் இன்று

2022 ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம் இன்று

வீடியோ காஃன்பரன்ஸிங் முறையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) இன்று நடைபெறுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஆண்டு பொதுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பசுமை எரிசக்திதுறையில் கால்தடம் பதிப்பதாக அறிவிப்பு வெளியானது.

    அதேபோல், 2020ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் மைனாரிட்டி முதலீட்டாளராக நுழைவதாக முகேஷ் அம்பானி அறிவிப்புகளை வெளியிட்டார். எனவே, இந்தாண்டு வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    வீடியோ காஃன்பரன்ஸிங் முறையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. ரிலையன்ஸ் தலைவர் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி பேச்சுக்குப் பின், நிர்வாக குழுவின் மற்ற உறுப்பினர் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்வை பல்வேறு தளங்களில் நேரலையாக பார்க்கலாம்

     

    யூடியூப்


     

    பேஸ்புக்

    https://www.facebook.com/events/610199153827102/

    https://www.facebook.com/events/484097953163347/

    ட்விட்டர்

    https://twitter.com/i/broadcasts/1PlJQaOpPDVJE

    கூ(Koo)

    https://www.kooapp.com/koo/RelianceUpdates/7c68d5a8-4e12-4e52-9491-62e5524174e7
    Published by:Kannan V
    First published:

    Tags: Mukesh ambani, Reliance

    அடுத்த செய்தி