முகப்பு /செய்தி /வணிகம் / தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ 5ஜி சேவை தீபாவளி முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Mumbai, India

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM)  இன்று நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வருடாந்திர கூட்டத்தில் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

top videos

    மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில்  தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Mukesh ambani, Reliance, Reliance AGM 2022