இந்தியாவின் முன்னணி தொழில் குழுமாக விளங்கும் ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் 90ஆவது பிறந்த நாள் அன்மையில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ரிலையன்ஸ் குழுமத்தின் தொண்டு அமைப்பான ரிலையன்ஸ் பவுன்டேஷன் இந்திய மாணவர்களின் உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் திட்டத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் பவுன்டேஷனின் தலைமை பொறுப்பில் நீட்டா அம்பானி உள்ளார். நீட்டா அம்பானி தனது அறிவிப்பில் கூறியதாவது, எனது மாமனார் திருபாய் அம்பானி இளைஞர்களின் ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவரது 90ஆவது பிறந்த தினத்தில் அடுத்த 10 ஆண்டு காலத்தில் நாங்கள் நாட்டின் 50,000 மாணவர்களின் உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவுளேளோம்.
இதன்மூலம் இளைய தலைமுறை நாட்டின் வளர்ச்சி பாதையில் புதிய சகாப்தத்தை எழுதுவார் என முகேஷ் அம்பானியும் நானும் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி, 2022-23 கல்வி ஆண்டில் 5,000 மாணவர்களுக்கு இளங்கலை பட்டம் பயில ரூ.2 லட்சம் ஸ்காலர்ஷிப் தொகை, 100 மாணவர்களுக்கு முதுகலை பட்டம் பயில ரூ.6 லட்சம் ஸ்காலர்ஷிப் தொகையை ரிலையன்ஸ் பவுன்டேஷன் வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 14, 2023 தொடங்குகிறது.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை பதவியையேற்று 20 ஆண்டுகள் நிறைவு
www.scholarships.reliancefoundation.org என்ற இணைதளத்தில் இதற்கான விண்ணப்பம், கூடுதல் தகவல்களை பார்த்துக்கொள்ளலாம். கம்ப்யூடர் சயின்ஸ், ஆர்டிபீசியல் இன்டெலிஜென்ஸ், கணிதம், எல்க்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
1996ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி ஸ்காலர்ஷிப் தொடங்கப்பட்டது. அதேபோல், ரிலையன்ஸ் பவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 13,000 இளைஞர்கள் பயனடைந்து சிறந்த உயர்கல்வியை பெற்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உயர்வான இடத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mukesh ambani, Reliance, Reliance Foundation