ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிராண்டிங் பிரிவான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட், இத்தாலியின் முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனமான பிளாஸ்டிக் லெக்னோ(Plastic Legno SPA) நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இந்தியாவில் பொம்மை உற்பத்தி மற்றும் பொம்மை விற்பனை சந்தையில் புதுமையை புகுத்தும் நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரிட்டன் நாட்டின் பொம்மை விற்பனை நிறுவனமான ஹாம்லேஸ்சுடன் ரிலையன்ஸ் பிராண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. அதேபோல், பிளாஸ்டிக் லேக்னோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் 25 ஆண்டுகளுக்கும் மேலகா கோலோச்சி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் தனது வர்த்தகத்தை தொடங்கியது. இந்தியாவில் இந்த சந்தை சிறப்பாக வளர்ந்து வருவதால், இங்கு வலுவான உற்பத்தி மையத்தை உருவாக்க இத்தாலி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பிரதமரின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் விதமாக இத்தாலியின் பிளாஸ்டிக் லெக்னோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய பொம்மை சந்தையில் ரிலையன்ஸ் பிரான்ட்ஸ் நிறுவனம் களமிறங்குகிறது. இந்த புதிய கூட்டணியில் உற்பத்தி செய்யப்படும் பொம்மைகள் இந்திய சந்தை மட்டுமின்றி உலக சந்தையிலும் தடம் பதிக்கும். ஏற்கனவே பிரட்டனின் ஹாம்லேஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து நாட்டின் முன்னணி பொம்மை விற்பனையாளராக ரிலையன்ஸ் பிரான்ட்ஸ் உள்ளது. ஹாம்லேஸ் நிறுவனம் 15 நாடுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகளை வைத்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் முறையில் கடன் வாங்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா?
இத்தாலியின் லேக்கோ நிறுவனத்தின் துணை தலைவர் பாவ்லோ சுனினோ கூறுகையில், 'இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் பிரான்ட்ஸ் மற்றும் ஹாம்லேஸ் உடன் இனைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்க்கால சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் தயாராக உள்ளோம். இந்திய சந்தையில் நவீனமான, தரமான பொருள்களை உருவாக்குவதுடன் கலாசா ரீதியாகவம் மக்களை தொடர்புபடுத்தும் விதமாக எங்கள் பொருள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Reliance