பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்க, பிரிட்டீஷ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

News18 Tamil
Updated: August 6, 2019, 10:01 PM IST
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்க, பிரிட்டீஷ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்
News18 Tamil
Updated: August 6, 2019, 10:01 PM IST
ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கெனவே நாடு முழுவதும் ஆயிரத்து 400 மையங்களில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் உள்ளன. தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம், 5 ஆயிரத்து 500 விற்பனை நிலையங்களுக்கான உரிமமும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், 3 500 உரிமத்தையும் வைத்துள்ளன.

இந்நிலையில், புதிய ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் இணைந்து, நாடு முழுவதும் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளன. அத்துடன், நாடு முழுவதும் 30 விமான நிலையங்களில் விமானங்களுக்கான எரிபொருள் விற்பனையிலும் ஈடுபட்ட உள்ளன.


இந்த புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் வைத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...