ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எஃப்.எம்.சி.ஜி மார்கெட்டில் களமிறங்க உள்ளதாக முகேஷ் அம்பானியின் மகளும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் இயக்குனருமான ஈஷா அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தின் இயக்குனர் ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் எஃப்.எம்.சி.ஜி மார்கெட்டில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார். எஃப்.எம்.சி.ஜி. என்பது அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் ஆகும். குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் விரும்பும் விலை மலிவான மிட்டாய்கள் மற்றும் சாக்லெட் போன்றவை இந்த வகையில் வரும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின், சில்லரை வணிகம் தொடர்பான நிறுவனம் ரிலையன்ஸ் ரீட்டெய்ல். இந்நிறுவனம் எண்ணெய் முதல் டெலிகாம் வரை பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் புதிதாக எஃப்.எம்.சி.ஜி துறையில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹிந்துஸ்தான் யுனிலிவர், நெஸ்லே, பிரிட்டானியா ஆகிய பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுடன் போட்டிப்போட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை உயர்ந்த தரத்திலும் மலிவு விலையிலும் தயாரித்து விற்பனை செய்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என அதன் இயக்குனர் ஈஷா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இனி வாட்ஸ் அப்பில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் - ஜியோ மார்ட்-டின் புதிய சேவை!
மேலும் இதில், இந்தியாவில் உள்ள பழங்குடியினர் மற்றும் மற்ற விளிம்பு நிலை மக்கள் தயாரிக்கும் தரமான பொருட்களை விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளிம்புநிலை மக்களில் வேலைவாய்ப்பு மட்டுமின்றி, இந்தியாவில் தனித்துவமான திறமை, நுண்ணறிவு ஆகியவை பாதுகாக்கப்படும் என ஈஷா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Isha Ambani, Reliance AGM 2022, Reliance Retail