முகப்பு /செய்தி /வணிகம் / Reliance AGM 2021: தொடங்கியது ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம்! - 5ஜி போன், ஜியோ மார்ட்.. என்னென்ன அறிவிப்புகள்?

Reliance AGM 2021: தொடங்கியது ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டம்! - 5ஜி போன், ஜியோ மார்ட்.. என்னென்ன அறிவிப்புகள்?


வருடாந்திர பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது நேரலையில் பேசி வருகிறார்..  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சந்தை மூலதனத்தால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) தற்போது தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஆண்டு பொதுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ காஃன்பரன்ஸிங் முறையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியிருக்கிறது. இந்த கூட்டத்தில் எத்தகைய அறிவிப்புகள் வரும் என அனைவரும் உற்று நோக்கியுள்ளனர்.

ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டமானது பல ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது நேரலையில் பேசி வருகிறார்..  ரிலையன்ஸின் வருடாந்திர கூட்டத்தின் தொடக்கத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலக்கெடுவுக்கு முன்னதாக தனது இலக்கை அடைவதில் முத்திரை பதித்த ரிலையன்ஸ் நிறுவனம், அதன் தொலைத் தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் O2C (எண்ணெய் முதல் ரசாயனம்) வணிகம் ஆகியவற்றில் புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடாந்திர கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய 5 ஜி ஸ்மார்ட் போன் மீது அனைவரும் கவனமும் குவிந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனுக்காக கூகுள் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலிவு விலையில் மடிக்கணினியையும் (Jio Book laptop) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகரித்துள்ள நிலையில், இதற்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மலிவு விலை மடிக்கணினியை ரிலையன்ஸ் வெளியிடக்கூடும் என்று எச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Jio, Mukesh ambani, Reliance, Reliance AGM 2021, Reliance Jio, Reliance Retail