ரிலையன்ஸ் நிறுவனம் 2021-22 நிதியாண்டில் 2.32 லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.இதன் மூலம் 2022 நிதியாண்டின் முடிவில் தன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை 3.43 லட்சமாக உயர்த்தியுள்ளது என்று நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
17.45 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் டெலிகாம்-டு-எனர்ஜி கூட்டு நிறுவனம், 2021-22 ஆம் ஆண்டில் அதன் சில்லறை, தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் வணிகம் ஆகிய ஆற்றல் வாய்ந்த வளர்ச்சி இயந்திரங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரிலையன்ஸ் ஆண்டறிக்கையில் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
அடுத்த 5-7 ஆண்டுகளில் மற்ற வணிகங்களை விஞ்சக்கூடிய வளர்ச்சி இயந்திரமாக அதன் பசுமை ஆற்றல் பிரிவு செயல்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி பங்குதாரர்களிடம் தெரிவித்தார்.
வருவாய் முன்னேற்றம்:
தேசிய கருவூலத்தில் ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த பங்களிப்பு 38.8 சதவீதம் உயர்ந்து, ரூ.188,012 கோடியாக இருக்கிறது. இது 2022 நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் பட்ஜெட் செலவினமான ரூ.34.83 லட்சம் கோடியில் 5.4 சதவீதமாகும்.
1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்
அதே நேரம் கடந்த நிதியாண்டில் வருவாயும் 47 சதவீதம் உயர்ந்து ரூ.792,756 கோடியாகவும், நிகர லாபம் 26.2 சதவீதம் உயர்ந்து ரூ.67,845 கோடியாகவும் உள்ளது. FY22 இல், வருவாயில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆனது.
வேலை அதிகரிப்பு:
ரிலையன்ஸ் குழுமம் 2021-22 நிதியாண்டில் சில்லறை வணிகத்தில் 168,910 வேலைகள், ஜியோவில் 57,883 என மொத்தம் 2.32 லட்சம் வேலைகளைச் சேர்த்துள்ளது. மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது
தொலை தொடர்பு:
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சேவை தளமான ஜியோ, 100 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், முதல் கட்டமாக 1,000 நகரங்களுக்கான 5G கவரேஜ் உத்தியை நிறைவு செய்துள்ளது. 2022 மார்ச் இறுதியில் 410.2 மில்லியனாக இருந்த ஜியோ மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் இறுதியில்,419.9 மில்லியனாக மாறியுள்ளது. ஜியோ சீனாவைத் தவிர்த்து உலகளவில் அதிக அளவிலான சேவையைக் கொண்டுள்ளது.
ஜியோ ஃபைபர் எனப்படும் இழை வழி இணைய சேவையான ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) தொடங்கப்பட்டதிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.
ஆயில்-டு-கெமிக்கல்ஸ் (O2C):
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மாற்ற, ரிலையன்ஸ் ஒரு உயிரி-சிதைக்கக்கூடிய, மக்கும் பாலிபியூட்டிலீன் அடிபேட் டெரெப்தாலேட் (PBAT) பாலிமரை உருவாக்கியுள்ளது. வாகன டயர்களுக்கான எளிதாக பஞ்சர் ஆகாத, காற்று ஊடுருவ முடியாத பாலிமரை உருவாக்கி அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களுக்கு மதிப்பைச் சேர்ப்பதோடு நிகர பூஜ்ஜிய-கார்பன் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க தயாராகியுள்ளது . சொந்த Jio-bp பல்ஸ் சார்ஜ் செயலியை உருவாக்கி, நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களைக் கொண்டுள்ளது.
பசுமை ஆற்றல்:
2021-22 நிதியாண்டில் ரிலையன்ஸின் ஸ்கோப் 1 மற்றும் 2 பசுமையில்ல வாயு உமிழ்வுகள் 1.64 சதவீதம் குறைந்து 45.15 மில்லியன் டன் கார்பனுக்கு நிகராகியுள்ளது. மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நுகர்வு ஆண்டுக்கு 351 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய ஆற்றலில் திறன்களை உருவாக்க ரூ. 5,500 கோடிக்கு மேல் கையகப்படுத்துதல் மற்றும் முதலீடுகளைச் செய்துள்ளது
'5ஜி' 4ஜியை விட 20 மடங்கு அதிக வேகம்... தகவல் தொடர்பு துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும்?
ரிலையன்ஸ், குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு பசுமை எரிசக்தியில் மொத்தம் ரூ. 5.95 லட்சம் கோடி முதலீடு மற்றும் மாநிலத்தில் 10 லட்சம் நேரடி அல்லது மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சில்லறை விற்பனை:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் சில்லறை வர்த்தகத் துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் கூடுதலாக 2 ஆயிரத்து 500 கடைகளை திறந்து தனது மொத்த கடைகளின் எண்ணிக்கையை 15 ஆயிரத்து196 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7 கடைகளைத் திறந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், 2 லட்சம் கோடி ரூபாய் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஸ்டார்ட்அப் இன்குபேட்டர்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் திட்டமான ஜியோ ஜென் நெக்ஸ்ட் 170 ஸ்டார்ட்அப்களை ஆதரித்துள்ளது. இது 2014 முதல் ஆரம்ப கட்ட துணிகர மூலதனத்தில் ரூ.2,600 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio Fiber, Mukesh ambani, Reliance, Reliance Jio, Reliance Retail