வீட்டை வாடகைக்கு எடுத்து பதிவு செய்து குடியிருக்கும்(Registered Tenants) நபர்கள் இனி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற புதிய விதி தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 18 ஆம் தேதி முதல் இந்த புதிய விதிகள் செயல்பாட்டில் உள்ளது.
முன்னதாக, கமர்சியல் பயன்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் தொழில், பொது பயன்பாட்டிற்காக லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கே இதுவரை ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டது. அதேவேளை, தனிநபருக்கு வாடகைக்கு வீடு விடுவதற்கு இதுவரை ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது இல்லை. இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதிக்கு பின்னர் தனி நபர் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தனி நபர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகைக்கு வீடு எடுத்திருந்தால் ஜிஎஸ்டி வரி பொருந்தாது. வணிக நோக்கத்துக்காக வீடு வாடகை எடுத்திருந்தால் வரி செலுத்த வேண்டும்.
இது ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் என்ற பெயரில் இந்த ஜிஎஸ்டி வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்டு வாடகைக்கு இருப்போர் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தி பின்னர் அந்த தொகையை மீண்டும் கிளைமாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை, பதிவு செய்யாத நபர்களோ, அல்லது மாத சம்பளம் பெறும் பொது நபர்களோ இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டியதில்லை. வாடகைக்கு வீடு எடுத்து வணிக செயல்பாடு, அல்லது சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கே இந்த புதிய ஜிஎஸ்டி வரி பொருந்தும். மேலும், வாடகைக்கு விடும் வீட்டின் உரிமையாளரும் இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டியதில்லை.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 14 முதல் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை... மத்திய அரசு அறிவிப்பு!
ஜிஎஸ்டி வரி உயர்வு மற்றும் குழப்பங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்களையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். பொது மக்களுக்கு சுமையில்லாதவாறு எளிய வகையில் ஜிஎஸ்டி வரி இருக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.