Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் அதிக வருமானம் தரும் திட்டம்.. வெறும் ரூ. 100 இருந்தால் கூட போதும் கணக்கை தொடங்கலாம்!

போஸ்ட் ஆபீஸில் அதிக வருமானம் தரும் திட்டம்.. வெறும் ரூ. 100 இருந்தால் கூட போதும் கணக்கை தொடங்கலாம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் RD கணக்கை நீங்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

    முதலீடு செய்வது எப்போதுமே அவசியமான ஒன்று. முன்பை காட்டிலும் இப்போது சேமிப்பின் வடிவங்கள் பல வந்துள்ளன. அதே நேரம் மக்களுக்கு நம்பிக்கையின்மையும் பாதுகாப்பு குறித்த பயமும் அதிகரித்துள்ளது. பணத்தை முதலீடு செய்ய வேண்டும், நல்ல சேமிப்பை தொடங்க வேண்டும், எதிர்காலத்திற்காக ஒரு தனி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என பல ஆசைகள் இருந்தாலும் நம்பிக்கையான இடத்தை தேடி மக்கள் யோசிக்கின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு என்பது பலரின் நம்பிக்கையான இடமாக மாறியுள்ளது. சமீப காலமாக இங்கு சேமிக்கும் பழக்கமும் மக்களுக்கு அதிகமாகியுள்ளது.

    நிச்சயமாக, மாறிவரும் தேவைகள், பொருளாதார நிலைமை போன்றவற்றை கருத்தி கொண்டு சம்பாதிக்கும் போதே ஒருநல்ல சேமிப்பை தொடங்கி விடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. சிலர் சேமிப்பை எதிர்காலத்துக்கான வருமானமாக பார்க்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான முதலீடுகள் அல்லது சேமிப்பை விரும்புகிறார்கள். அந்த வகையில்,போஸ்ட் ஆபீஸில் RD எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் கண்டிப்பாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சேமிப்பாக இருக்கும். இந்த கணக்கை தொடங்க ரூ. 100 இருந்தால் போதும்.

    இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் வரி மற்றும் சலுகைகள் குறித்து பார்ப்போம்.

    தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் RD வசதியை வழங்குகின்றன.சேமிப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புநிதியுடன் ஒப்பிடும்போது RD கணக்குக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே RD சேமிப்பால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.. RD கணக்குகளைத் தொடங்கி, நீங்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

     RD மீதான வட்டி விகிதம் :

    RD கணக்குக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறும். எனவே நீங்கள் ஒரு RD கணக்கைத் தொடங்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது இணையதளத்தில் வட்டியைப் பற்றிய தகவலைப் பெறலாம். இப்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது.

    சேமிப்புத் தேதியிலிருந்து மார்ச் 31 வரையில், நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு தவணையின் தொகையிலும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் அடிப்படையிலும், மார்ச் 31 வரை ஒரு வருடம் நிறைவடைந்தவுடன் வட்டி வரவு வைக்கப்படும். அவ்வாறு இலாத பொது, உங்கள் மாதந்திர சேமிப்பின் முதிர்வு தேதி வரை (நிகர TDS பொருந்தினால்) மொத்த தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும்.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் எது? விரிவான பார்வை!

    RD கணக்குக்கு வழங்கப்படும் வட்டி மற்றும் அசல் முதிர்ச்சியடைந்த பிறகு தான் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கில் வரவு வைக்கப்படும். மூத்த இந்திய குடிமகனாக இருந்தால், RD இல் 0.5 சதவிகிதம் அதிக வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள்.

    நீங்கள் ரெக்கரிங் கணக்கைத் தொடங்கும்போது, உங்கள் குடும்பம் அல்லது உறவினர் ஒருவரை உங்களின் நாமினியாகக் குறிப்பிடலாம். RD சேமிப்பு முதிர்வடையும் முன்பு உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டிய தேதிக்கு முன்னரே பணத்தை எடுப்பதற்கு நாமினிக்கு உரிமை கிடைக்கும். அதே போல, நீங்கள் எந்த நேரத்திலும் நாமினி அல்லது பயனாளியின் பெயரை மாற்றுவதற்கான உரிமையும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. SBI locker : வாடிக்கையாளர்களிடம் எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா?

    கணக்கு தொடங்கி 7 நாட்களுக்குள் மூடப்பட்டால் சேமிப்பிற்கு வட்டி கிடைக்காது. அதே போல, உங்கள் RD கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி