Home /News /business /

போஸ்ட் ஆபீஸ் VS எஸ்பிஐ..யோசித்து திட்டமிட்டால் ரூ. 7 லட்சம் உங்கள் கையில்!

போஸ்ட் ஆபீஸ் VS எஸ்பிஐ..யோசித்து திட்டமிட்டால் ரூ. 7 லட்சம் உங்கள் கையில்!

ரெக்கரிங் டெபாசிட்

ரெக்கரிங் டெபாசிட்

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியின் போது ரூ.6.9 லட்சத்துக்கும் அதிகமாக பணம் திரும்பக் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்  வழங்கும் தொடர் வைப்புத்தொகை (RD) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மாதாந்திர வைப்புத்தொகையின் மூலம் சேமிப்பை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் பலரும் இதுப்போன்ற சேமிப்பை அதிகம் விரும்புகின்றனர். அதுமட்டுமில்லை ரூ.5 லட்சம் வரையிலான வங்கி வைப்புத்தொகைகள் வைப்புத்தொகை காப்பீட்டு உத்தரவாதத்துடன் வருவதால், குறிப்பிட்ட நிதி இலக்குகளுக்கு நிதியைக் குவிப்பதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக RD கணக்கு செயல்படுகிறது.

    எஸ்பிஐயில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 120 மாதங்கள் வரை நீங்கள் RD கணக்கைத் திறக்கலாம்.போஸ்ட் ஆபீஸை பொறுத்தவரையில் 5 வருட RD கணக்கை வழங்குகிறது. தபால் அலுவலக RDன் தற்போதைய வட்டி விகிதம் 5.8% ஆகும். இந்த அஞ்சலக திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 மற்றும் அதன் பிறகு ரூ.10ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்பவர்கள், சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, RD கணக்கை தேவைப்பட்டால் க்ளோஸ் செய்து கொள்ளலாம்.

    ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய விதிகள் .. ரிசர்வ் வங்கியின் புதிய கைடுலைன்ஸ்!

    60 மாதாந்திர டெபாசிட்டுகளுக்குப் பிறகு ( 5 ஆண்டுகள்) தபால் அலுவலக RD முதிர்ச்சியடைகிறது. அதுமட்டுமில்லை மற்றொரு விண்ணப்பத்தை வழங்குவதன் மூலம் அஞ்சல் அலுவலக RD கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தும் கொள்ளலாம்.

    5 வருட டெபாசிட்டுக்கான SBI vs RD கணக்கீடு:

    திருத்தப்பட்ட விகிதங்களின்படி, ஐந்தாண்டு டெபாசிட்டுகளுக்கு எஸ்பிஐ 5.6% வட்டியை வழங்குகிறது.இந்த சேமிப்பில் நீங்கள் SBIல் மாதம் ரூ. 10,000 சேமிக்க தொடங்கினால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை 6,93,323 ரூபாயாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 6.45% வட்டி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.7,08,040 திரும்பக் கிடைக்கும்.

    போஸ்ட் ஆபீஸ்:

    போஸ்ட் ஆபிஸ் RD-யில் மாதாந்திர வைப்புத் தொகையான ரூ.100 சேமித்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து ரூ.6,969.67 திரும்பக் கிடைக்கும். இந்தத் தொகை 6 ஆண்டுகளில் ரூ.8,620.98 ஆகவும், 7 ஆண்டுகளில் ரூ.10,370 ஆகவும், 10 ஆண்டுகளில் ரூ.16,264.76 ஆகவும் உயரும்.

    YES BANK : அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டணத்தை திருத்திய யெஸ் வங்கி!

    அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகையில் மாதாந்திர வைப்புத் தொகையாக ரூ.10,000 சேமித்தால்  5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியின் போது ரூ.6.9 லட்சத்துக்கும் அதிகமாகத் திரும்பக் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Post Office, Savings, SBI

    அடுத்த செய்தி