Home /News /business /

ரீசார்ஜ் பிளான்கள் : போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்!

ரீசார்ஜ் பிளான்கள் : போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்!

ரீசார்ஜ் பிளான்கள்

ரீசார்ஜ் பிளான்கள்

Recharge plans : ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீபெய்டு கட்டணத்தை கடந்த ஆண்டு அதிகரித்தன.

    மொபைல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவ்வபோது கவர்ச்சிகரமான பிளான்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதில் எந்த நெட்வொர்க்கில் விலை குறைவான, தங்களுக்கு சௌகரியமான பிளான்கள் உள்ளன என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

    ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீபெய்டு கட்டணத்தை கடந்த ஆண்டு அதிகரித்தன. தற்போது இந்த நிறுவனங்கள் புதிய பிளான்களையும் அறிமுகம் செய்துள்ளன. ஆகவே, இவற்றில் எது நமது பட்ஜெட்டுக்கு சிறப்பானது, அதிக பலனுள்ளது என்பதை பார்க்கலாம்.

    ஏர்டெல்

    ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.479 க்கு ரீசார்ஜ் செய்து 56 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிசன் சந்தா 30 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. இலவச விங்க் மியூஸிக், இலவச ஹலோடியூன்ஸ், பாஸ்ட்டேக் போன்ற சேவைகளை பெறலாம்.

    இதையும் படிங்க.. சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

    ரிலையன்ஸ் ஜியோ

    ஜியோவில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக் ரூ.499 க்கு வழங்கப்படுகிறது. இதனுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமலேயே ஓராண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற சேவைகளையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பிஎஸ்என்எல்

    இருப்பதிலேயே மிக அதிகபட்ச வேலிடிட்டி வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கு நீங்கள் ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் ஜிங் மியூஸிக் ஆப் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

    இதையும் படிங்க.. Netflix : ரூ.199 சந்தா திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்.. முழு விவரம்!

    வோடஃபோன் ஐடியா

    இந்த நிறுவனத்தில் ரூ.479 க்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் வழங்கப்படுகிறது. இதில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் ஆகியவை வேலிடிட்டி காலம் முடியும் வரை வழங்கப்படுகிறது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச பிரவுசிங், வீக் எண்ட் டேட்டா ரோலிங் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆக்சஸ் போன்ற சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கட்டணம் மற்றும் வேலிடிட்டி நாட்கள் மாறுபடுகின்றன. அதற்கு ஏற்றார்போல டேட்டா அளவு மற்றும் இதர சலுகைகள் மாறுபடுகின்றன. பெரும்பாலும் எஸ்எம்எஸ், கால்ஸ் ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Airtel, Jio, Recharge Plan

    அடுத்த செய்தி