ஹோம் /நியூஸ் /வணிகம் /

Recharge Plans : ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

Recharge Plans : ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

ரீசார்ஜ் பிளான்கள்

ரீசார்ஜ் பிளான்கள்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தற்போது உயர்த்தப்பட்ட விலைகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல புதிய திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

இந்திய டெலிகாம் ஆபரேட்டர்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) அனைத்தும் கடந்த மாத இறுதியில் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. தற்போது புதிய விலை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தற்போது உயர்த்தப்பட்ட விலைகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல புதிய திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வழங்கும் அனைத்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

ஏர்டெல் (Airtel)

* ஏர்டெல் இப்போது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் 1 ஜிபி டேட்டாவை ரூ.155 திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதேபோல 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.179 திட்டமும், 84 நாட்களுக்கு 6ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.455 திட்டமும் உள்ளது.

* நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் திட்டங்களை பொறுத்தவரை, ரூ.209 திட்டம் 1ஜிபி டேட்டாவை 21 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல, ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்கும் ரூ.239 திட்டமும், நாளொன்றுக்கு 1ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் ரூ.265 திட்டமும் உள்ளது.

* தவிர, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா திட்டங்களை பொறுத்தவரை, ரூ.299 திட்டமானது 28 நாட்களுக்கும், ரூ.479 திட்டமானது 56 நாட்களுக்கும், புதிய ரூ.666 திட்டமானது 77 நாட்களுக்கும். ரூ.719 திட்டமானது 84 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.

* நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் ரூ.359 திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல, ரூ.549 திட்டத்தை 56 நாட்களுக்கும், ரூ.839 திட்டத்தை 84 நாட்களுக்கும் வழங்குகிறது.

இதையும் படிங்க.. ஏழை எளிய மக்களும் பெரிய சேமிப்பை இங்கு செய்யலாம்.. போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

* மேலும், ஏர்டெல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் ரூ.449 திட்டத்தையும் வழங்குகிறது.

* ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் 28 நாட்களுக்கு ரூ.599 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.699 திட்டத்தையும் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா: (Vi)

* வோடபோன் ஐடியா 18 நாட்களுக்கு 200எம்பி மொத்த டேட்டாவை ரூ.129-க்கு வழங்குகிறது. அதேபோல ரூ.149 பிளான் 1ஜிபி டேட்டா (மொத்தம்) 21 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.155 பிளான் 1ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்குகிறது. தவிர, ரூ.179 திட்டம் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா வையும், ரூ.459 திட்டம் 84 நாட்களுக்கு 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல, 56 நாட்களுக்கு 4ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.329 திட்டமும், 30 நாட்களுக்கு 25ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.327 திட்டமும், 60 நாட்களுக்கு 50ஜிபி டேட்டா வழங்கும் ரூ.537 திட்டமும் உள்ளது.

* ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா என்ற திட்டங்களை பொறுத்தவரை, Vi இல் 18 நாட்களுக்கு ரூ.199 திட்டம், 21 நாட்களுக்கு ரூ.219 திட்டம், 24 நாட்களுக்கு ரூ.239 திட்டம் மற்றும் 28 நாட்களுக்கு ரூ.269 திட்டம் உள்ளது.

* ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை பொறுத்தவரை, Vi ஆனது 21 நாட்களுக்கு ரூ.249 திட்டத்தையும், 42 நாட்களுக்கு ரூ.399 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.479 திட்டத்தையும், 70 நாட்களுக்கு ரூ.599 திட்டத்தையும், 77 நாட்களுக்கு ரூ.666 திட்டத்தையும், 84 நாட்களுக்கு ரூ.719 திட்டத்தையும் வழங்குகிறது.

இதையும் படிங்க.. SBI பேங்கில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டத்தில் இதுவும் ஒன்று!

* ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்தை பொறுத்தவரை, 28 நாட்களுக்கு ரூ.359 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.539 திட்டத்தையும், 84 நாட்களுக்கு ரூ.839 திட்டத்தையும் வழங்குகிறது.

* இதுதவிர ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் ரூ.409 திட்டமும், 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.475 திட்டமும், 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.699 திட்டமும் மற்றும் 70 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை ரூ.901 திட்டமும் vi-யில் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ: (Reliance Jio)

ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு டேட்டா தேவைகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

* ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை பொறுத்தவரை, 20 நாட்களுக்கு ரூ.149 திட்டத்தையும், 24 நாட்களுக்கு ரூ.179 திட்டத்தையும், 28 நாட்களுக்கு ரூ.209 திட்டத்தையும் ஜியோ வழங்குகிறது.

* ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா திட்டத்தை பொறுத்தவரை, ஜியோ நெட்ஒர்க் ரூ.119 திட்டத்தை 14 நாட்களுக்கும், ரூ.199 பிளானை 23 நாட்களுக்கும், ரூ.239 பிளானை 28 நாட்களுக்கும், ரூ.479 பிளானை 56 நாட்களுக்கும், ரூ.666 பிளானை 84 நாட்களுக்கும் வழங்குகிறது.

* ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை பொறுத்தவரை, ஜியோ ரூ.249 திட்டத்தை 23 நாட்களுக்கும், ரூ.299 திட்டத்தை 28 நாட்களுக்கும், ரூ.533 திட்டத்தை 56 நாட்களுக்கும், ரூ.719 திட்டத்தை 84 நாட்களுக்கும் வழங்குகிறது.

* ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா திட்டத்தை பொறுத்தவரை, ஜியோ 28 நாட்களுக்கு ரூ.419 திட்டத்தையும், 28 நாட்களுக்கு ரூ.601 திட்டத்தையும், 84 நாட்களுக்கு ரூ.1199 திட்டத்தையும் வழங்குகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Airtel, Jio, Recharge Plan