முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.200-க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை யூஸ் பண்ணிக்கலாம்!

ரூ.200-க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை யூஸ் பண்ணிக்கலாம்!

Recharge plans

Recharge plans

Recharge பிளான்கள் யூஸர்களுக்கு டேட்டாவுடன் சேர்த்து அன்லிமிட்டட் கால்ஸ்களையும் வழங்குகின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

சமீபத்தில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலையை 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தின. பல வாடிக்கையாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய ப்ரீபெய்ட் பிளான்களின் படி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரூ.200-க்கும் குறைவான விலையில் இருக்கும் சில ப்ரீபெய்ட் பிளான்களை வழங்குகின்றன. இந்த பிளான்கள் யூஸர்களுக்கு டேட்டாவுடன் சேர்த்து அன்லிமிட்டட் கால்ஸ்களையும் வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோவின் பிளான்கள்: ரூ.199 பிளான்: இந்த ப்ரீபெய்ட் பிளான் 23 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 1.5GB ஹைஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றுடன் வருகிறது. இந்த பிளானில் மொத்தம் 34.5GB டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.179 பிளான்: இந்த ப்ரீபெய்ட் பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸுடன் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதன் மூலம் யூஸர்கள் நாளொன்றுக்கு 1GB ஹைஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த பிளானில் மொத்தம் 24GB டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.149 பிளான்: இந்த ப்ரீபெய்ட் பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸுடன் 20 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 1GB ஹைஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் அளிக்கப்படுகிறது. இந்த பிளானில் மொத்தம் 20GB டேட்டா வழங்கப்படுகிறது.

அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லை.. போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டை ஆன்லைனில் தொடங்குவது ரொம்ப ஈஸி!

ரூ.119 பிளான்: இந்த பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸுடன் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. . தினசரி 1.5GB ஹைஸ்பீட் டேட்டா, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் அளிக்கப்படுகிறது. இந்த பிளானில் மொத்தம் 300 SMS மற்றும் 21GB டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளான்கள்:

ரூ.179 பிளான்: இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான் மொத்தம் 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பிளானில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் நன்மைகளில் ஃப்ரீ ஹலோ ட்யூன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ வின்க் மியூசிக் ஆகியவை அடங்கும்.

ரூ.155 பிளான்: 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் மொத்தம் 1GB டேட்டா, 300 SMS மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவை வழங்கப்படுறது. கூடுதல் நன்மைகளில் ஃப்ரீ ஹலோ ட்யூன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ வின்க் மியூசிக் ஆகியவை அடங்கும்.

வோடபோன் ஐடியா பிளான்கள்:

ரூ.199 பிளான்: இந்த ப்ரீபெய்ட் பிளான் 18 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1GB டேட்டா மற்றும் 100 SMS, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவற்றை யூஸர்களுக்கு வழங்குகிறது. கூடுதல் பலன்களில் Vi மூவிஸ் மற்றும் டிவி-க்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை அடங்கும்.

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு!

ரூ.179 பிளான்: Vi-ன் இந்த ப்ரீபெய்ட் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், மொத்தம் 2GB டேட்டா மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் பலன்களில் Vi மூவிஸ் மற்றும் டிவி-க்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை அடங்கும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Airtel, Jio, Recharge Plan