முகப்பு /செய்தி /வணிகம் / சமீபத்தில் சம்பள உயர்வு பெற்றுளீர்களா.? உடனடியாக இதை சரிபார்க்கவும்

சமீபத்தில் சம்பள உயர்வு பெற்றுளீர்களா.? உடனடியாக இதை சரிபார்க்கவும்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

EPFO Interest | ஏப்ரல் 1, 2022 முதல் (அதாவது 2021-22 நிதியாண்டு முதல்),வருமான வரி விதிகளின்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பிலிருந்து ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருடாந்திர அப்ரைசல் சீசன் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக, பல பணியாளர்கள் தங்கள் வருடாந்திர சம்பள உயர்வு (increment letters) கடிதங்களை பெற்றுள்ளனர். மேலும் பலர் அவற்றைப் பெற உள்ளனர்.

இவர்களின் மொத்த சம்பளம் அதிகரித்து உள்ளத்துடன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் செலுத்தப்படும் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. சம்பள உயர்வை பெற்றுள்ள ஊழியர்கள், அவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கானவரி விலக்கு விவரங்களை சம்பள உயர்வுக்கான கடிதங்களில் சரி பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறி, அதிகப்படியான பங்களிப்புகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.

ஏப்ரல் 1, 2022 முதல் (அதாவது 2021-22 நிதியாண்டு முதல்), வருமான வரி விதிகளின்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பிலிருந்து ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். உதாரணமாக ஒரு ஊழியர் ஒரு வருடத்தில் தனது பிஎஃப் கணக்கில் ரூ.3 லட்சம் பங்களிப்பதாக இருந்தால், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் அதாவது ரூ.50,000-க்கு மேலான பங்களிப்பில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்

. ரூ.2.5 லட்சத்திற்கும் மேலான PF பங்களிப்புகளுக்கான வட்டி வருமானத்தில் இருந்து 10% TDS கழிக்கப்படும். அக்கவுண்ட் கணக்கு வைத்திருப்பவரின் PAN கிடைக்கவில்லை என்றால், 20% என்ற விகிதத்தில் TDS கழிக்கப்படும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) படி. வரியை கணக்கிட, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு செய்யும் ஊழியர்களின் பிஎஃப் கணக்குகள் வரி விதிக்க கூடியது ( taxable) மற்றும் வரி விதிக்க முடியாதது (non-taxable) என 2 பகுதிகளை கொண்டிருக்கும்.

வரி விதிக்கக்கூடிய PF பங்களிப்புக் கணக்கு பின்வருவனவற்றின் மொத்தமாக இருக்கும்:

a. 2021-2022 மற்றும் அதைத் தொடர்ந்து முந்தைய ஆண்டுகளின் கணக்கில் முந்தைய ஆண்டில் ஒருவர் செய்துள்ள பங்களிப்பு, இரண்டில் எது வரம்பை விட அதிகமாக இருக்கிறது.

b. மேலே (a) மீது திரட்டப்பட்ட வட்டி என EPFO சமீபத்திய சுற்றறிக்கையில் கூறி இருக்கிறது.

Also Read : அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்

EPF பங்களிப்புக்கான தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.1% ஆகும். EPFO விதிகளின்படி, ஒரு ஊழியர் தனது சம்பளத்தில் 12% (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) EPF கணக்கில் பங்களிக்க முடியும். ஒரு சமமான தொகையானது ஒரு நிறுவனத்தால் குறிப்பிட்ட ஊழியரின் PF கணக்கில் செலுத்தப்படுகிறது, இதில் 8.33% பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) மற்றும் 3.67% PF க்கு செல்கிறது. இதனிடையே FY 2021-22 (AY 2022-23)-க்கு அறிவிக்கப்பட்ட சமீபத்திய வருமான வரி ரிட்டர்ன் படிவங்கள் தனிப்பட்ட வரி செலுத்துவோரை அதிகமாக EPF மற்றும் VPF பங்களிப்புகளில் பெற்ற வட்டியை பற்றி வரி செலுத்துமாறு கேட்டு கொள்கிறது.

First published:

Tags: Epfo, PF AMOUNT