பெட்ரோல் விலை 39 ரூபாய் தாங்க.. நம்புங்க.. மத்திய மாநில அரசு போடுற வரியால்தான் 100 ரூபாய்க்கு விற்குறாங்க

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

  • Share this:
    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்பட்டுள்ள மதிப்பு கூடுதல் வரிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாற்றம் நிலவுகிறது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதேபோல, டீசல் விலையும் உயர்ந்து வருகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 52 டாலர்களாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 63 புள்ளி 4 டாலர்களாகவும், தற்போது 72 டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோலின் விற்பனை விலையில் 58 சதவீதம் அளவுக்கும், டீசலில் 52 சதவீதம் அளவுக்கும் மத்திய, மாநில அரசுகள் வரி வசூலிக்கின்றன.

    Also Read: அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க கூட்டணிதான் காரணம் - சி.வி.சண்முகம் நிர்வாகிகளிடம் குமுறல்

    குறிப்பாக, பெட்ரோலின் அடிப்படை விலை 39 ரூபாய் 30 காசுகளாக இருக்கும் நிலையில், அதன் மீது செஸ், சுங்கவரி என மொத்தம் 32 ரூபாய் 90 காசுகளை மத்திய அரசு வரியாக விதிக்கிறது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 20 காசுகளுக்கு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

    இப்போது மாநில அரசு 24 ரூபாய் 42 காசுகள் வரி விதிப்பதோடு, டீலர் கமிஷனும் லிட்டருக்கு 3 ரூபாய் 82 காசுகள் வசூலிக்கப்படுவதால், பெட்ரோல் விலை 100 ரூபாய் 44 காசுகளுக்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நகரங்களில் இந்த விலை பெட்ரோல் கொண்டு செல்லப்படும் போக்குவரத்துச் செலவிற்கு ஏற்ப மாறுபடுகிறது.

    தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் 33 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது. அதோடு, லிட்டருக்கு 4 ரூபாய் 50 காசுகள் கூடுதல் வாட் வரியும், ஒரு சதவீதம் மேல் வரியும் விதிக்கப்படுகிறது. டீசல் மீது 23 சதவீத வரியுடன், லிட்டருக்கு 3 ரூபாய் மற்றும் ஒரு சதவீத மேல் வரி விதிக்கப்படுகிறது.இதனால், போபாலில் பெட்ரோல் 108 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 98 ரூபாய் 13 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

    Also Read;என்னது Audi A6 சொகுசு கார் இல்லையா?.. கொதித்த நெட்டிசன்கள்!! கூகுளில் அதிகம் தேடப்படும் காரின் விலை

    ராஜஸ்தானில் பெட்ரோல் மீது 36 சதவீத வாட் வரியும், லிட்டருக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் மேல் வரியும் விதிக்கப்படுகிறது. டீசல் மீது 26 சதவீத வாட் வரியுடன் ஒரு ரூபாய் 75 காசுகள் அளவுக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 64 காசுகளுக்கும், டீசல் 98 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்கப்படுகின்றன.

    மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீது 25 சதவீத வரியுடன், லிட்டருக்கு 10 ரூபாய் மேல் வரி விதிக்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை 21 சதவீத வாட் வரியுடன், கூடுதலாக 3 ரூபாய் மேல் வரி விதிக்கப்படுகிறது.இதனால், மும்பையில் பெட்ரோல் விலை 105 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் விலை 96 ரூபாய் 91 காசுகளாகவும் உள்ளன.

    தெலங்கானாவில் பெட்ரோல் மீது 35 புள்ளி 2 சதவீதமும், டீசல் மீது 27 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 103 ரூபாய் 78 காசுகளாகவும், டீசல் விலை 97 ரூபாய் 40 காசுகளாகவும் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆந்திரப்பிரதேசத்தில் பெட்ரோல் மீது 33 சதவீத வரியும், டீசல் மீது 22 புள்ளி 5 சதவீத வரியும் விதிக்கப்படுகின்றன. சித்தூர் நகரில் பெட்ரோல் விலை லிட்டர் 106 ரூபாய் 65 காசுகளாகவும், டீசல் விலை 99 ரூபாய் 60 காசுகளாகவும் உள்ளன.

    தமிழ் நாட்டில் டீசல் மீது 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெட்ரோல் மாற்றமின்றி 100 ரூபாய் 75 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 91 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.இதனிடையே சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 6 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 6 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    First published: