முகப்பு /செய்தி /வணிகம் / RBL வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அனைத்து வட்டி விகிதங்களும் மாறிடுச்சு!

RBL வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அனைத்து வட்டி விகிதங்களும் மாறிடுச்சு!

ஆர்.பி.எல் வங்கி

ஆர்.பி.எல் வங்கி

RBL bank : வட்டி விகிதங்களில் பிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதங்கள் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

  • 1-MIN READ
  • Last Updated :

தனியார் துறை வங்கி நிறுவனமான ஆர்பிஎல் வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்ஸட் டெபாசிட் கணக்கு மற்றும் ரெக்கரிங் டெப்பாசிட் கணக்கு ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதம் அனைத்தும் பிப்ரவரி 3ஆம் தேதி  (இன்று) வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது என்று ஆர்பிஎல் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்ஸட் டெபாஸிட் வட்டி எவ்வளவு?

பிப்ரவரி 3ஆம் தேதி முதல், 7 நாட்கள் தொடங்கி 14 நாட்கள் வரையில் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளில் ரூ.3 கோடிக்கும் குறைவான பணத்துக்கு 3.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 15 முதல் 45 நாட்களில் மெச்சூரிட்டி ஆகும் பணத்துக்கு 3.75 சதவீதமும், 46 முதல் 90 நாட்களில் மெச்சூரிட்டி ஆகும் பணத்துக்கு 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 91 நாட்கள் முதல் 180 நாட்களில் மெச்சூரிட்டி ஆகும் பிக்ஸட் டெபாஸிட் கணக்குகளுக்கு 4.50 சதவீதமும், 181 - 240 நாட்களில் மெச்சூரிட்டி அடைந்தால் 5 சதவீதமும் வட்டி வழங்கப்படும் என்று ஆர்பிஎல் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.. Google : ஏர்டெல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்.. பின்னால் இருக்கும் மிகப் பெரிய காரணம்!

241 நாட்கள் முதல் 364 நாட்களில் மெச்சூரிட்டி ஆகும் டெர்ம் டெபாஸிட் மற்றும் 12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்கு குறைவான டெர்ம் டெபாஸிட்களுக்கு முறையே 5.25 சதவீதம் மற்றும் 6.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 60 மாதங்கள் 2 நாட்கள் முதல் 240 மாதங்கள் கால அளவில் மெச்சூரிட்டி அடையும் பிக்ஸட் டெபாஸிட் கணக்குகளுக்கு 5.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது, 1.5 லட்சம் பணத்துக்கு 60 மாதங்கள் வரி-சேமிப்பு பிரிவில் வைத்தால் 6.30 சதவீத வரியை ஆர்பிஎல் வங்கி வழங்கி கொண்டிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு அனைத்து விதமான பிக்ஸட் டெபாஸிட் கணக்குகளில் 0.5 சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும். உள்நாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் என்ஆர்ஓ, என்ஆர்இ மற்றும் பிளெக்ஸி பிக்ஸட் டெபாஸிட் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும்.

ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதம்

ரெக்கரிங் டெபாசிட் கீழ் செலுத்தப்படும் பணத்துக்கும் இதேபோன்று வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களில் பிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெகரிங் டெபாசிட் வட்டி விகிதங்கள் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்

அதே சமயம், சேமிப்பு கணக்கின் கீழ் பணம் வரவு வைப்பவர்களுக்கான வட்டி விகிதம் மாறுபடுகிறது. ரூ.1 லட்சம் வரையிலும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே இருந்தபடி முறையே 4.25 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் என்ற அளவில் வட்டி வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை பணம் வரவு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் 6.00 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகவும், ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை பணம் வரவு வைப்பர்களுக்கு 6.25 சதவீதமாகவும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank accounts, Savings