மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடண்ட் அளிப்பது குறித்து முடிவு செய்யவில்லை: சக்திகாந்த தாஸ்

சர்ச்சைகள் உள்ளதால் பட்ஜெட்டிற்கு முன்பு ஆர்பிஐ டிவிடண்ட்டாக உபரித் தொகையை வழங்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Web Desk | news18
Updated: January 7, 2019, 8:38 PM IST
மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடண்ட் அளிப்பது குறித்து முடிவு செய்யவில்லை: சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்
Web Desk | news18
Updated: January 7, 2019, 8:38 PM IST
மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடண்ட் தொகை அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடண்ட்டாக 40,000 கோடி ரூபாயை அளிக்க இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சக்திகாந்த தாஸ், டிவிடண்ட் அளிப்பது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு மற்றும் ஆர்பிஐ இடையில் உபரி தொகையைப் பெறுவது குறித்து மிகப் பெரிய சர்ச்சை நிலவி வரும் நிலையில் டிவிடண்ட் குறித்த செய்தி மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு 3.3 சதவீத நிதிப் பற்றாக்குறையில் உள்ள நிலையில் உள்ளதாகச் சென்ற மாதம் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் சுபாஷ் சந்திர கர்க் கூறியிருந்தார். ஆர்பிஐ பட்ஜெட்டிற்கு முன்பு தங்களிடம் உள்ள உபரி தொகையை மத்திய அரசுக்கு அளித்தால் அதன் மூலம் நிதி பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் சர்ச்சைகள் உள்ளதால் பட்ஜெட்டிற்கு முன்பு ஆர்பிஐ டிவிடண்ட்டாக உபரித் தொகையை வழங்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசும் தங்களுக்கு அடுத்த நிதி ஆண்டு வரை ஒரு ரூபாய் கூட ஆர்பிஐயிடம் உள்ள உபர்த்தொகை தேவையில்லை என்று கூறியுள்ளது.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் பணப்புழக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தேவைப்படும் போது அதை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: காதலுக்காக கிரீடத்தை துறந்த மலேசிய மன்னர்
Loading...
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...