கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் Yes Bank நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது.யெஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த உத்தரவு வரும் வரை , வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ.50,000 வரையே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவச்செலவு, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதியுடன் 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.