’கூட்டுறவு வங்கிகளை சரியவிட மாட்டோம்’ - ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி

PMC வங்கியைக் கவனிக்க மட்டுமே ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

’கூட்டுறவு வங்கிகளை சரியவிட மாட்டோம்’ - ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
  • News18
  • Last Updated: October 4, 2019, 6:34 PM IST
  • Share this:
கூட்டுறவு வங்கிகள் சரிவைச் சந்திக்கும் நிலைவரை விட்டுவிட மாட்டோம் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகள் கடுமையான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. கடந்த மாதம் பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கூட்டுறவு வங்கியின் மீது சில முறைகேடு புகார்களும் உள்ளன.

இந்த முறைகேடு புகார்கள் மற்றும் PMC வங்கியின் நடவடிக்கைகள் மீது தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. “PMC வங்கியைக் கவனிக்க மட்டுமே ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சர்ச்சையை மட்டும் வைத்து இதர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யக்கூடாது. கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளோம்.


தேவைப்படும் சூழலில் அரசுடன் கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகள் குறித்தும் ஆலோசிப்போம்” எனக் கூறியுள்ளார். இத்தகைய சூழலில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வகிதத்தை 5.15 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

மேலும் பார்க்க: 250 மாவட்டங்களில் வங்கிகள் நடத்தும் மாபெரும் ‘லோன் மேளா’..!

திருச்சி நகைக்கடை கொள்ளை: கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading