முகப்பு /செய்தி /வணிகம் / ஏடிஎம்-ல் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி அதிரடி

ஏடிஎம்-ல் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி அதிரடி

ஏடிஎம்

ஏடிஎம்

ரிசர்வ் வங்கி ‘ஏடிஎம்களில் பணம் நிரப்பாததற்கான அபராதத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

நுகர்வோரின் அவசர பணத்தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்யும் விதத்தில், ஏடிஎம்களில் பணம் தீர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகள் மற்றும் வைட் லேபிள் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ‘ஏடிஎம்களில் பணம் நிரப்பாததற்கான அபராதத் திட்டத்தை’ (Scheme of Penalty for non-replenishment of ATMs) தொடங்கியுள்ளது. இந்த திட்டம் வருகிற அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்-ல் பணம் இல்லாமல் இருந்தால், அந்த குறிப்பிட்ட ஏடிஎம் -ன் வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று RBI அறிவித்துள்ளது.

அதன்படி 2021ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல், ஒரு வங்கி தங்கள் ஏடிஎம்களில் பணம் இருப்பதை கண்காணிக்காமல் போனாலும் மற்றும் ஏடிஎம் மெஷினில் பணம் இல்லாமல் போனாலும் அந்த குறிப்பிட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அபராதம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான நோக்கம் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளதாவது, "பணமதிப்பிழப்பு காரணமாக ஏடிஎம்களின் செயலிழப்பு மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது மற்றும் பணம் நிர்ப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட ஏடிஎம் செயல்பாடுகள் மூலம் பணம் கிடைக்காத சூழல் உருவானது. இது பொதுமக்களுக்கு தவிர்க்க முடியாத சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also Read : நிலையான வருமானம்...5 வருஷம் கழிச்சு ரூ. 20 லட்சம் கிடைக்க இந்த சேமிப்பை தேர்ந்தெடுங்கள்!

எனவே, வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) ஏடிஎம்களில் பணம் கிடைப்பதை கண்காணிக்கவும், பணப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக சரியான நேரத்தில் பணம் நிரப்புவதை உறுதி செய்யவும் வங்கி அமைப்புகள் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வாங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் இணங்காமல் போனால் குறிப்பிட்ட வங்கி மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை லேபிள் ஏடிஎம்களை பொறுத்தவரை, குறிப்பிட்ட இயந்திரத்தின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யாத வங்கிக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை ஏடிஎம் நிறுவனத்தின் வெள்ளை ஆபரேட்டரிடமிருந்து வங்கி வசூலித்து கொள்ளலாம். அபராதத் திட்டம் வங்கியின் பிராந்திய அலுவலகங்களின் விநியோகத் துறைகளால் (Issue Departments) நிர்வகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஏடிஎம்கள் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் விநியோகத் துறை பொறுப்பாளர் இந்த அபாரதங்களை விதிக்க தகுதியான அதிகாரியாக இருப்பார்.

Also Read : தம்பதியினர் கவனத்திற்கு... 60 வயதில் மாதம் ரூ.10,000 வரை பென்சன் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தகுதிவாய்ந்த அதிகாரத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, வங்கிகள்/ WLAO-க்கள் அபராதம் விதித்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகத்தின் பிராந்திய இயக்குனர் அல்லது அதிகாரியை அணுக வேண்டும். ஊரடங்கு அல்லது வேலைநிறுத்தம் போன்ற வங்கி மற்றும் WLAOக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உண்மையான காரணங்கள் மட்டுமே மேல்முறையீடுகளுக்கு பரிசீலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: ATM, RBI, Reserve Bank of India